திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட ஆலங்காயத்தில் பேரூராட்சி செயலாளர் பாண்டியன் தலைமையில் நடந்த தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களாகச் சேர்க்கும் முகாம் நடைபெற்றது.
இதில், கலந்துகொண்ட தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் மக்களிடம் தொழிலாளர் நல வாரியத்தில் சேர்வதற்கான விண்ணப்பங்களை பெற்றார். பின்னர் அம்மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
முகாமில் பேசிய அமைச்சர் நிலோபர் கபில், "அதிமுகவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் மறைந்த பின்னர் மக்கள் தான் அவர்களுடைய வாரிசுகள். ஆனால் திமுகவில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என்று அவர்களுடைய ரத்த பந்தம் உள்ள ஆள்கள் தான் அரசியல் வாரிசுகளாக உள்ளனர்.
இது ஜனநாயக ஆட்சி. திமுகவினர் வாரிசு அரசியல் செய்வதற்கு அரசர்கள் ஆட்சி அல்ல. தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சி செல்லாது" என விமர்சித்து பேசினார்.
இதையும் படிங்க: டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம்: ஸ்டாலின் உட்பட 1600 பேர் மீது வழக்குப்பதிவு