ETV Bharat / state

ரூ.6 கோடி மோசடி: முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் மீது பகீர் புகார்! - முன்னாள் அமைச்சர் நிலோஃபர் கபில்

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.6 கோடி மோசடி செய்துள்ளதாக அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிலோஃபர் கபில்
நிலோஃபர் கபில்
author img

By

Published : May 22, 2021, 2:12 PM IST

திருப்பத்தூர்: அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 6 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினராகவும் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தவர் நிலோபர் கபில். ஆனால், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் நிலோபர் கபிலுக்கு போட்டியிட அதிமுக தலைமை வாய்ப்பு வழங்கவில்லை. இதனால், அப்போதைய அமைச்சர் கே.சி.வீரமணி மீது நேரடியாக அவர் குற்றஞ்சாட்டினார்.

இச்சூழலில், மே 21ஆம் தேதி அதிமுக தலைமை வெளியிட்ட அறிவிப்பில், முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த பரபரப்பு நீங்குவதற்குள் முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் மற்றும் குடும்பத்தினர் 4 பேர் மீதும் அவரின் உதவியாளராக இருந்தவர் டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அதிமுக அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த நிலோபர் கபிலிடம் உதவியாளராக பணியாற்றி வந்தவர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த பிரகாசம். இவர் டிஜிபி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் மற்றும் அவரின் நெருங்கிய உறவினர்களான ஜாபர், இத்திரிஸ் கபில், முகமது காசிப் மற்றும் வாகித் ஆகிய 4 பேர் மீது பண மோசடிப் புகார் அளித்துள்ளார்.

அவரது புகார் மனுவில், “நிலோபர் கபில் தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பணியாற்றியபோது, தனது தொழிலாளர் நலத்துறையிலும், வக்பு வாரியத்திலும் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 105 நபர்களிடம் 6 கோடியே 62 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார். பணம் அளிக்க வந்தவர்களிடம் அந்த பணத்தை உதவியாளராக இருந்த தன்னிடம் நேரடியாகக் கொடுக்கச் சொல்லியும், தனது வங்கி கணக்கில் செலுத்தச் சொல்லியும், காசோலையாகவும் பெற்றுக் கொண்டார்.

பணத்தை தன் வங்கிக் கணக்கில் பெற்றபின் அந்த பணத்தை முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் உத்தரவின் பேரிலும், அவர்களின் நெருங்கிய உறவினர்களான ஜாபர், இத்திரிஸ் கபில், முகமது காசிப் மற்றும் வாகித் ஆகிய 4 பேரின் வங்கிக் கணக்கிற்கு மாற்றி விட்டேன். ஆனால், பணம் பெற்றவர்களுக்கு, கரோனா நோய்த் தொற்றைக் காரணம் காட்டி சொன்னபடி வேலை வாங்கித் தராமலும், வாங்கிய பணத்தையும் திருப்பித் தராமலும் நிலோபர் கபிலும் அவர்களின் உறவினர்கள் 4 பேரும் அலைக்கழித்து வருகின்றனர்” எனக் கூறப்பட்டிருந்தது.

மனுவில்,அமைச்சரிடம் பணம் கொடுத்த 105 நபர்களின் பெயர்களையும், அவர்கள் கொடுத்த பணத்தையும் குறிப்பிட்டுள்ள பிரகாசம், வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பணம் கொடுத்தவர்களை மோசடி செய்து அவர்கள் அளித்த 6 கோடி ரூபாயில் இங்கிலாந்தில் உள்ள தனது மூத்த மகள் நர்ஜீஸ் பெயரில் சொத்து வாங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.