திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பால்நாகுப்பம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 1.32.47 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ஆட்சியர் சிவனருள் தலைமையில் நடைபெற்ற விழாவில், வணிகவரித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி கட்டடத்துக்கு அடிக்கல நாட்டினார்.
நபார்டு வங்கி திட்டத்தின் நிதியில் இருந்து நான்கு வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், ஆண்கள் கழிவறை, பெண்கள் கழிவறை, குடிநீர் வசதி ஆகியவற்றை கட்ட நிர்வாகத்தின் மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த அடிக்கல் நாட்டு விழாவில் வட்டாட்சியர் மோகன், கிராம நிர்வாக அலுவலர் தணிகாச்சலம், பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரபாகரன், இதர ஆசிரியர்கள் , பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.