திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த நடராஜபுரம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டாவளத்தில் ரத்த வெள்ளத்தில் சுய நினைவை இழந்து இளைஞர் கிடந்து உள்ளார். தலை மற்றும் கை, கால் பகுதிகளில் பலத்த காயங்களுடன் இருந்த இளைஞரை மீட்ட அப்பகுதி மக்கள், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆம்பூர் அரசு மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை முடிந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இளைஞர் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார், இளைஞரிடம் விசாரணை நடத்தினர்.
இதில் இளைஞர் பெயர் அஜய் குமார் என்றும், உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மங்களூருவில் இருந்து சென்னை சென்ற வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலில் பயணம் செய்த போது தவறி தண்டவாளத்தில் விழுந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நாளை மறுநாள் அமைச்சராக பதவியேற்கிறார் உதயநிதி ஸ்டாலின்