ETV Bharat / state

பட்டியலின இளைஞரை காதல் திருமணம் செய்த பெண் கடத்தல்? - திருப்பத்தூரில் பரபரப்பு! - women kidnap who married sc youth

Tirupattur kidnap case: வாணியம்பாடி அருகே பட்டியலின இளைஞரை காதலித்து திருமணம் செய்த பெண்ணை, உறவினர்கள் கடத்திச் சென்றதாக அப்பெண்ணின் கணவர் காவல்துறையில் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tirupattur kidnap case
பட்டியலின இளைஞரை காதல் திருமணம் செய்த பெண் கடத்தல்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 18, 2024, 1:47 PM IST

திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்தவர், தியாகு (21). பட்டியலின இளைஞரான தியாகுவை அதே கிராமத்தைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த நர்மதா என்ற பெண் காதலித்து வந்துள்ளார். அதற்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்காத நிலையில், நர்மதா தனது பெற்றோரின் எதிர்ப்பை மீறி, கடந்த 2023 டிசம்பர் 6ஆம் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, நர்மதாவின் பெற்றோர் தனது மகளை காணவில்லை என அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில், மறுநாள் (டிச.7) தியாகு மற்றும் நர்மதாவை வாணியம்பாடி நடுவர் நீதிமன்றத்தில் அம்பலூர் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது, நர்மதா மேஜர் என்ற காரணத்தால், பெண்ணின் விருப்பப்படி அவரது கணவர் தியாகுவுடன் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டது.

பின்னர் தியாகுவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, கணவர் - மனைவி இருவரும் வெளியூரில் தங்கியிருந்த நிலையில், பெண்ணின் உறவினர்கள் தியாகுவையும், நர்மதாவையும் தீவிரமாகத் தேடியுள்ளனர். இது குறித்து தகவலறிந்த ஜோடி, கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தியாகுவின் சொந்த ஊரான சங்கராபுரத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே தியாகு வீட்டிற்கு வந்த நர்மதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், தியாகுவையும் அவரது பெற்றோரையும் தாக்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து, நர்மதாவையும் தாக்கிய அவர்கள், நர்மதாவை காரில் கடத்திச் சென்றுள்ளனர்.

தற்போது தியாகு, தனது மனைவி நர்மதாவை அவரது தந்தை ராஜேந்திரன், அண்ணன்களான கோவிந்த ராஜ், பிரபு, ராஜேஷ் மற்றும் ஈச்சங்கால் ஊராட்சி மன்றத் தலைவர் ஏழுமலை ஆகியோர் காரில் கடத்திச் சென்றதாகக் கூறி, அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில், நர்மதாவை கடத்திச் சென்ற அவரது தந்தை, அண்ணன் உள்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்த அம்பலூர் போலீசார் நர்மதாவையும், குற்றம் சாட்டப்பட்ட நர்மதாவின் குடும்பத்தினரையும் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், மாற்று சமூக இளைஞரை திருமணம் செய்த பெண்ணை, அவரது பெற்றோர் கடத்திச் சென்ற சம்பவத்தாலும், சங்கராபுரம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாலும் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

இதையும் படிங்க: பொங்கல் பண்டிகைக்குச் சென்றுவிட்டு திரும்பியபோது சோகம்.. இரு குழந்தைகளும் உயிரிழப்பு - பெற்றோருக்கு தொடரும் சிகிச்சை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.