ETV Bharat / state

வாணியம்பாடியில் கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டிய தமிழர் பண்பாட்டுத் திருவிழா! - வாணியம்பாடி செய்திகள்

வாணியம்பாடி பகுதியில் தமிழர் பண்பாட்டுத் திருவிழா நான்காவது ஆண்டாக நேற்று துவங்கியது. இத்திருவிழாவில் நடைபெற்ற பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய நெல் வகை கண்காட்சி ஆகியவைகளை பொதுமக்கள் கண்டு மகிழ்ந்தனர்.

வாணியம்பாடியில் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் நடைப்பெற்ற தமிழர் பண்பாட்டுத் திருவிழா

author img

By

Published : Jan 7, 2023, 5:24 PM IST

வாணியம்பாடியில் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் நடைப்பெற்ற தமிழர் பண்பாட்டுத் திருவிழா

திருப்பத்தூர்: வாணியம்பாடி வாரச்சந்தை பகுதியில் வேர்கள் அறக்கட்டளை சார்பில் 4-ம் ஆண்டு தமிழர் பண்பாட்டுத் திருவிழா ஜனவரி 6ம் தேதி துவங்கியது. இந்நிகழ்ச்சியை வாணியம்பாடி நகர்மன்ற தலைவர் உமாபாய் சிவாஜி கணேசன் மற்றும் வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் நாகராஜ் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

ஜனவரி 6 முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில், பரதநாட்டியம், பொம்மலாட்டம், பறையிசை, கட்டைகால் ஆட்டம், சாட்டைக்குச்சி ஆட்டம், மயிலாட்டம், கரகாட்டம், தோல்கருவி பெரிய மேளம், தற்காப்பு கலை நிகழ்வு, தேவராட்டம், கருப்பசாமி ஆட்டம், வில்லுப்பாட்டு, தோல்பாவை கூத்து, போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற உள்ளது.

இத்திருவிழாவில் பாரம்பரிய நெல் வகைகள் மற்றும் பயிர் வகைகள் திருப்பத்தூர் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தமிழர் பண்பாட்டு திருவிழாவில் வாணியாம்பாடி மட்டுமல்லாது சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 'அது வேற வாய் இது நாற வாய்' கரும்பு கொள்முதலில் கறார் கட்டிய கலெக்டர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.