திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த கீழ்முருங்கை பகுதியில் பெங்களூர்-சென்னை செல்லும் ரயில்வே மார்க்கம் அமைந்துள்ளது. இச்சூழலில் நேற்று இந்தத் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற ஒருவர் சரக்கு ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர், உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஜோலார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விசாரணையில், இறந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (55), என்பதும், அவர் அப்பகுதியில் கூலித்தொழிலாளியாக வேலைசெய்துவந்ததும் தெரியவந்துள்ளது.