ETV Bharat / state

பட்டியல் இனத்தவர்கள் குறித்து அவதூறு பரப்பியவர் பகிரங்க மன்னிப்பு... திருப்பத்தூரில் நடந்தது என்ன? - A Man who spoke obscenely about SC

திருப்பத்தூர் அருகே பட்டியல் இனத்தவர்களை ஆபாசமாகப் பேசி வீடியோ வெளியிட்டதாக, சம்பந்தப்பட்ட நபரின் வீட்டில் பட்டியல் இனத்தை சேர்ந்த இளைஞர்கள் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், தான் ஆபாசமாகப் பேசியது தவறுதான் என அந்நபர் மன்னிப்பு கோரியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 28, 2023, 5:49 PM IST

பட்டியல் இனத்தவர்களை அவதூறாக பேசி வாட்ஸ் அப்பில் பரப்பியவர் - பகிரங்க மன்னிப்பு

திருப்பத்தூர்: தங்கபுரம் பகுதியைச் சேர்ந்த பழனி மகன் நந்தகுமார்(33). இவர் திருப்பத்தூர் பகுதியில் உள்ள ஜூமோட்டோ நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். இவர் தொடர்ந்து வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் பட்டியல் இனத்தவர்களை ஆபாசமாகப் பேசியும் தனக்கு அனைத்தும் தெரியும் என்பது போலக் கருத்துக்களைக் கூறியும் வாட்ஸ் அப்பில் பரவ செய்துள்ளார்.

அதேபோல், பத்திரிகை நிறுவனங்களையும் செய்தியாளர்களைப் பற்றியும் சில தினங்களுக்கு முன்பு ஆபாசமாகப் பேசி சமூக வலைத்தளங்கள் பரவச் செய்துள்ளார். இதனை அறிந்த பட்டியல் இனத்தவர்கள் 30-க்கும் மேற்பட்டோர் இன்று (ஜன.27) அவருடைய வீட்டிற்குச் சென்று அவர்களும் தகாத வார்த்தைகளால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக வீட்டிற்கு வெளியே வராமல் இருந்த நந்தகோபால், ஜன்னல் வழியே தான் செய்தது தவறு மன்னித்து விடுங்கள் சாமிகளா..! என்று கூறி மன்னிப்பு கேட்டார். எனவே பட்டியலினத்தவர்களைப் பற்றித் தொடர்ந்து ஆபாசமாகப் பேசிய சமூக வலைத்தளங்களில் பரவச் செய்து வரும் நந்தகோபால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: கணவர்கள் ஜாக்கிரதை.. சண்டையில் கணவரின் நாக்கை கடித்து துப்பிய மனைவி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.