திருப்பத்தூர் மாவட்டம், சு.பள்ளி பட்டு ஊராட்சி மின்நகரை சேர்ந்தவர் தண்டபாணி (37) மகள் அட்சயா (15). இவர் கசிநாயக்கன்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.
திருப்பத்தூரிலிருந்து கந்திலி வழியாகச் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் கடைக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக சிமெண்ட் லோடு ஏற்றி வந்த லாரி, அட்சயாவின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.இதில், அவர் லாரியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து அங்கு சென்ற காவல் துறையினர், உயிரிழந்த அட்சயாவின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து, விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் சுதாகர் (49) என்பவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.