திருப்பத்தூர்: சாமநகர் பகுதியில் டிராவல்ஸ் நடத்தி வரும் வேலு (56) நேற்று தனது மகன் ஹரிஹரனுடன் சபரிமலைக்கு சவாரிக்காக சென்றிருந்தார். இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவி பூங்கொடி (54) இரவு நேரம் என்பதால், பக்கத்து தெருவிலுள்ள வேலுவின் அண்ணன் வீட்டிற்கு சென்று தூங்கச் சென்றார்.
இதனையறிந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவின் கதவையும் உடைத்து பீரோவில் இருந்த 9 பவுன் தங்க நகை மற்றும் 65 ஆயிரம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர். பின்னர், இன்று (டிச.18) அதிகாலை 5 மணியளவில் வீட்டிற்கு வந்த பூங்கொடி, முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிச்சியடைந்தார்.
இதனைத் தொடர்ந்து, பீரோ உடைக்கப்பட்டு நகை பணம் திருடு போனது தெரியவந்தது. பின்னர், இது குறித்து திருப்பத்தூர் நகர காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்து திருடிய நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சாலை விபத்தில் திமுக பிரமுகர்கள் 2 பேர் உயிரிழப்பு