திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகேயுள்ள கதவாளத்தில் சிவா என்பவர் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் இன்று கடையின் ஊழியர்கள் கடையைத் திறந்து பழுது பார்க்க வேண்டிய வாகனத்தை வெளியே எடுக்க முற்பட்டபோது கடையினுள் சுமார் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு இருந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் வெளியே அலறியடித்து ஓடிவந்து பின்னர் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து கதவாளம் பகுதிக்கு வந்த வனத்துறையினர், கடையினுள் இருந்த மலைப்பாம்பை பிடித்து பத்திரமாக அரங்கல்துர்கம் வனப்பகுதிக்குள் விட்டனர்.
சுமார் 8 அடி நீளமுள்ள மலைப் பாம்பை பார்க்க அப்பகுதியில் ஏராளமான மக்கள் கூடினர். இதனால், அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: வெறிநாய்கள் கடித்து ஆடுகள் பலி: விவசாயிகள் வேதனை