திருப்பத்தூர் மாவட்டம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக வருகின்ற மே மாதம் 5ஆம் தேதி நடைபெறவிருக்கும் 38ஆவது வணிகர் தின மாநில மாநாடு குறித்து ஏலகிரியில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரம ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “மே 5ஆம் தேதி 38ஆவது வணிகர் தின மாநில மாநாட்டில் வைக்கப்பட இருகின்ற கோரிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தினோம். குறிப்பாக கரோனா பேரிடர் காலத்தில் வணிகர்கள் முகக்கவசம் அணியாவிட்டாலும், வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணியாவிட்டாலும் அபராதம் விதிக்கப்படுவதை ரத்து செய்து எல்லாருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வியாபாரிகள் முறையான இடைவெளி, கிருமிநாசினி, முக கவசம் ஆகியவற்றை பயன்படுத்தினாலும் அலுவலர்கள் அத்துமீறி அபராதம் விதிக்கக் கூடாது.
சிறு வணிகர்களை அப்புறப்படுத்தும் நோக்கில், நாளை (ஏப்.10) மார்க்கெட் பகுதிகளில் கடையைத் திறக்க கூடாது என கூறுவதையும் முழுமையாக ஏற்றுக்கொள்ள இயலாது. சுழற்சி முறையில் அனுமதி தரப்பட வேண்டும், தராதபட்சத்தில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை நாங்கள் முன்னிறுத்த வேண்டியிருக்கும். ஆகவே இதுகுறித்து அலுவலர்கள் எங்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கு வியாபாரிகள் காரணமல்ல, பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்துவிட்டாலே விலைவாசி குறைந்து விடும்” என்றார்.
இதையும் படிங்க : ஏழுமலையான் வேடத்தில் கைலாச நாட்டு உரிமையாளர்: ட்ரெண்டிங் ஆகும் நித்தி!