சங்கராபுரம் கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் பாலாற்றில் குளிக்க சென்றுள்ளனர். சிறுவர்கள் குளித்து கொண்டிருந்த போது காலில் ஏதோ தென்பட்டுள்ளது. உடனடியாக நீரில் மூழ்கி பார்த்ததில் பெருமாள் மற்றும் 2 அம்மன் சிலைகளை கண்டறிந்தனர். இதையடுத்து வாணியம்பாடி வருவாய் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
பின்னர் அங்கு சென்ற கிராம நிர்வாக அலுவலர் வளர்மதி, கிராம உதவியாளர் பரந்தாமன் ஆகியோர் 3 சிலைகளையும் மீட்டு வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அவை பழங்கால சிலைகளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
வாணியம்பாடியை சுற்றியுள்ள பல இடங்களில் தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்தால், அது நகரின் வரலாற்றை மாற்றியமைக்க உதவும் என சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: வெளிநாடுகளிலிருந்து மீட்கப்பட்ட 10 சாமி சிலைகள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!