ETV Bharat / state

உரிய ஆவணம் இருந்தும் ரூ. 22 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் - Tirupathur flying squad

திருப்பத்தூர்: சின்ன கந்திலி சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படையினர், 22 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தைப் பறிமுதல் செய்துள்ளனர்.

flying squad
திருப்பத்தூர்
author img

By

Published : Mar 11, 2021, 9:10 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த சின்னகந்திலி சோதனைச் சாவடியில் இன்று(மார்ச்.11) தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியே வந்த ஓசூர் டைட்டான் நிறுவனத்திற்குச் சொந்தமான சீக்வெல் என்ற மினி வேனில், சுமார் 22 கோடியே 50 லட்சம் மதிப்பிலான தங்கம் இருப்பது தெரியவந்துள்ளது. இதனை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட நகைக்கடைகளில் விநியோகம் செய்வதற்காகத் துப்பாக்கி ஏந்திய காவலருடன் வந்துள்ளனர்.

அந்த வாகனத்தை ஜிபிஎஸ் பூட்டுப் போட்டுப் பூட்டியுள்ளதால், சம்பந்தப்பட்ட நிர்வாகம் பாஸ்வேர்டு சொன்னால் மட்டுமே திறக்கமுடியும் எனக் கூறியதாகத் தெரிகிறது. அதேபோன்று நகைகளுக்கு உரிய ஆவணம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

திருப்பத்தூரில் ரூ. 22 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

இருப்பினும், இச்சமயத்தில் 22 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் எடுத்துச் செல்வது முறையானது இல்லை எனக் கூறி, அதனைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: கல்லூரி மாணவரைத் தாக்கி செயின் பறிப்பு: நண்பனே சதி செய்தது அம்பலம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.