திருப்பத்தூர் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியிலிருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு லாரி மூலம் ரேசன் அரிசி கடத்தபடுவதாக வாணியம்பாடி டி.எஸ்.பி. பழனிசெல்வத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நெக்குந்தி சுங்கசாவடியில் காவல்துறையினர் வாகனச்சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரியை சோதனை செய்ததில், 20 டன் ரேசன் அரிசி மூட்டைகளுடன் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கண்டெய்னர் லாரி ஓட்டுநர் நாகராஜ் என்பவரை கைது செய்த காவல்துறையினர், லாரியையும், ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்து குடிமைபொருள் வழங்கல் துறையிடம் ஒப்படைத்தனர்.
20 டன் ரேஷன் அரிசியுடன் பறிமுதல் செய்யப்பட்ட லாரியை குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள் ஆம்பூர் அடுத்த கீழ்முருங்கை பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் வட்ட செயல்முறை கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும் ஓட்டுநர் நாகராஜிடம் ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நிலத்தகராறு: தம்பியை கொலைசெய்த சகோதரர்கள் கைது!