ETV Bharat / state

கோழிப்பண்ணையில் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பு - கோழிப்பண்ணை

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே கோழிப்பண்ணையில் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பை பிடித்த பொதுமக்கள் அதனை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

12 feet long Python that entered the poultry farm

author img

By

Published : Dec 9, 2020, 10:32 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தெக்குப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் அதே பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இவரது கோழிப்பண்ணையில் இன்று மாலை 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. பண்ணையில் ஊர்ந்து சென்ற மலைப்பாம்பினை கண்ட வெங்கடேசன் உடனடியாக இதுகுறித்து ஆலங்காயம் வனத்துறையினருக்கு தகவல் அளித்தார்.

வனத்துறையினர் வருவதற்குள் பொதுமக்களே அந்த மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர் பொதுமக்களிடமிருந்து மலைப்பாம்பை கைப்பற்றிய வனத்துறையினர், அதனை திம்மாம்பேட்டை காப்புக்காட்டில் விட்டனர்.

இதையும் படிங்க:நிவர் புயல் சேத விவரங்கள் வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.