திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த, ஆம்பூரில் அமைக்கப்பட்டுள்ளது போல, வாணியம்பாடியிலும் கட்டுப்பாட்டு அறை அமைத்து, நகர் முழுவதும் 100 விழுக்காடு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அமைப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ஆட்சியர் சிவனருள், காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் தலைமையில், வணிகர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் வியாபாரிகளிடம் கலந்து கொண்டனர். இதில், காய் கறிகள், மளிகை மற்றும் மருந்து பொருட்களை மக்கள் வீட்டிலிருந்தே பெற வாகனங்கள் மூலம் விநியோகம் செய்வது குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்த்துக் கொண்டு சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றும், தேவையில்லாமல் வெளியில் சுற்றும் நபர்களின் வாகனகள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும். மேலும், நகர் முழுவதும் 160க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பின்னர், 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மூலம் மக்களுக்கு தேவையான உதவிகளை வீட்டிலிருந்தே பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. எனவே, மக்கள் வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்க்கவேண்டும் என்று கூறினார்.
இதையும் படிங்க: தனி நபர் விலகலை கடைபிடிக்காத மக்கள் - ஒழுங்குபடுத்திய காவல்துறை