ETV Bharat / state

ஆபத்தான முறையில் பைக் சாகசம் செய்து வீடியோ வெளியீடு.. இளைஞர்களை தட்டித் தூக்கிய போலீசார்! - தூத்துக்குடி செய்திகள்

Youths Bike Adventure: பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களை கைது செய்த போலீசார், அவர்களது இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

Youths Bike Adventure
ஆபத்தான முறையில் பைக் சாகசம் செய்த இளைஞர்கள் கைது
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 13, 2023, 6:49 AM IST

ஆபத்தான முறையில் பைக் சாகசம் செய்த இளைஞர்கள் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் மற்றும் விபத்து ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தை ஓட்டினாலோ அல்லது சாகசம் செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டாலோ, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டிருந்தார்.‌

இந்த நிலையில், தூத்துக்குடி பிரையன்ட் நகரைச் சேர்ந்த பிரவீன் ராஜ் என்ற இளைஞர், அவரது அதிநவீன இருசக்கர வாகனத்தில் துறைமுக சாலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், விபத்து ஏற்படுத்தும் வகையிலும் அதிக வேகம் மற்றும் அதிக ஒலி எழுப்பி சாகசம் செய்து, அதை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.‌

இதனைத் தொடர்ந்து, தென்பாகம் காவல் துறையினர் சமூக வலைத்தளத்தில் பைக் சாகசம் செய்து வெளியிட்ட பிரவீன் ராஜை கைது செய்து, அவரது இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதே போன்று திருச்செந்தூரிலும் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட, திருச்செந்தூர் அருகே உள்ள பரமன்குறிச்சி பகுதியைச் சேர்ந்த டைட்டஸ் டேனியல் என்ற இளைஞரையும் போலீசார் கைது செய்ததுடன், அவரது இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் பைக் சாகசத்தில் ஈடுபட்டு சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: மயிலாப்பூர் சாய்பாபா கோயிலில் கோபுரத்தில் தீ விபத்து..காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.