ETV Bharat / state

காதலியின் கணவன் தலையை வெட்டி வீசிய இளைஞர் - ஒருதலைக் காதலால் கொடூரம்

காதலித்த பெண்ணை, வேறு ஒருவர் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த இளைஞர், அவளது கணவனின் தலையை வெட்டி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒருதலைக் காதலால் கொடூரம்
ஒருதலைக் காதலால் கொடூரம்
author img

By

Published : Oct 21, 2021, 8:08 PM IST

தூத்துக்குடி: மாவட்டம் புதூர் குமாரகிரி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சூரிய ராகவன் (31). இவரது மனைவி மகாலட்சுமி. இருவரும் காதலித்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். சூரியராகவன் எட்டயபுரத்தில் டிவி பழுதுபார்க்கும் கடை நடத்தி வருகிறார்.

நேற்று (அக்.20) காலை வழக்கம் போல் சூரியராகவன் கடையை திறந்து வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இளைஞர் சூரியராகவன் மீது மிளகாய் பொடியை தூவி தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இது குறித்து தகவல் அறிந்து எட்டயபுரம் காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்விற்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கைது

இந்த கொலை தொடர்பாக எட்டயபுரம் அருகே உள்ள சோழபுரத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ஆனந்தராஜ் வாக்குமூலத்தில் கூறியதாவது, "மகாலட்சுமியும் நானும் உறவினர்கள். பள்ளி படிக்கும் போதே அவளை நான் காதலித்து வந்தேன். ஒரு நல்ல வேலைக்கு சென்றுவிட்டு மகாலட்சுமி பெற்றோரிடம் திருமணம் குறித்து பேசலாம் என நினைத்தேன். வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்றேன். சொந்த ஊருக்கு திரும்பியபோது மகாலட்சுமி சூரியராகவன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

ஒருதலை காதலால் கொடூரம்

சூரியராகவனை எனது வீட்டிற்கு டிவியை சரி செய்து தருமாறு அழைத்தேன். வீட்டில் வைத்து கொலை செய்ய திட்டம் தீட்டினேன். அது நடக்கவில்லை.

எனது கோபம் மகாலட்சுமி மீது அதிகமாக இருந்ததால் அவளை முதலில் கொலை செய்ய திட்டம் தீட்டினேன்.
கடந்த வாரம் மகாலட்சுமியை கொலை செய்ய எட்டயபுரம் பேருந்து நிலையம் சென்றேன். அப்போது காவல் துறையினர் நின்றதால் அங்கிருந்து திரும்பிவிட்டேன்.

அடுத்து சூரியராகவன் கடைக்கு சென்றேன். அப்போது அவர் மீது நான் மிளகாய் பொடியை தூவி கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டேன். எனக்கு கிடைக்காத காதலி வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது" என தெரிவித்துள்ளார். இது குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பகையாளி வீட்டை மறந்து, பக்கத்து வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.