ETV Bharat / state

திருச்செந்தூர் கோயிலில் தரிசனத்திற்கு வந்த இளைஞர் மின்சாரம் தாக்கி பலி..! கோயில் நிர்வாகத்தினர் மீது தந்தை குற்றச்சாட்டு! - திருச்செந்தூரில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

திருச்செந்தூர் முருகன் கோயில் புறக்காவல் நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த எர்த் பைப்பில் ஏற்பட்டிருந்த மின் கசிவின் காரணமாக, மின்சாரம் தாக்கி மதுரையைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Youth dies due to electric shock in Tiruchendur temple
திருச்செந்தூர் கோயிலில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்ததால் பரபரப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 1, 2023, 8:31 AM IST

திருச்செந்தூர் கோயிலில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்ததால் பரபரப்பு

தூத்துக்குடி: மதுரை அடுத்த திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ஜோதிபாஸ் என்பவர், தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 7 பேருடன் திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய நேற்று வந்துள்ளனர். பின்னர் குடும்பத்தினர் அனைவரும், தரிசனத்தை முடித்து விட்டு கடலில் புனித நீராடி உள்ளனர்.

கடலில் நீராடிய பின்னர், ஜோதிபாஸ் தனது மகன் பிரசாத் (22) ஆகியோர், திருச்செந்தூர் கோயிலின் புறக்காவல் நிலையம் முன்பு அமர்ந்துள்ளனர். அப்போது புறக்காவல் நிலையம் முன்பு அமைக்கப்பட்டிருந்த, எர்த் பைப்பில் இருந்த மின் கசிவு எதிர்பாராத விதமாக பிரசாத் மீது பயந்துள்ளது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பிரசாத்தின் தந்தை ஜோதிபாஸ், பிராசத்தைக் காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது, அவர் மீதும் லேசாக மின்சாரம் பாய்ந்துள்ளது. அதனை அடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்ட பிறகு, கோயிலில் இருந்த பக்தர்கள் மற்றும் காவல் துறையினர் மின்சாரம் தாக்கப்பட்ட பிரசாத்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், பிரசாத் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் பிரசாத் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், இச்சம்பவம் குறித்து திருச்செந்தூர் கோயில் காவல் நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வரக்கூடிய கோயிலில், நிர்வாகத்தினரின் அலட்சியத்தால் மின்சாரம் தாக்கி தனது மகன் உயிரிழந்ததாகத் தந்தை ஜோதிபாஸ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இச்சம்பவம் திருச்செந்தூர் கோயிலுக்கு வருகை தந்திருந்த பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: சாரல் மழையால் விபரீதம்; ஈரோடு அருகே ஜீப் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.