ETV Bharat / state

கிராம மக்களிடம் பண மோசடி செய்த இளைஞர்: போலீஸ் வலைவீச்சு! - காவலர்

தூத்துக்குடி: மத்திய அரசின் திட்டத்தின் கீழ் கிராம மக்களிடம் வங்கிக்கடன் வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு தலைமறைவான இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

பண மோசடி
author img

By

Published : Feb 7, 2019, 5:40 PM IST

நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள முத்துசாமிபுரம் கிராமத்தில் வசித்து வரும் மக்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு குமார் என்ற ஒரு இளைஞர் அறிமுகமாகியுள்ளார். தன்னை, தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் வங்கியின் அலுவலராக அறிமுகப்படுத்திக்கொண்ட அவர், "நான் பணிபரியும் வங்கி சார்பில் மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த பெண்களுக்கு தலா ரூ.1 லட்சம் கடன் வழங்கப்பட உள்ளது. இந்த கடனை பெற்றுக் கொண்டு மாதம் ரூ.3150 வீதம் 40 மாதங்களுக்கு தவணை தொகையை செலுத்தினால் போதும். இந்த கடன் திட்டம் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதால், தேர்தலையொட்டி இந்த கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்துவிடும் வாய்ப்பும் உள்ளது" என்று கூறி ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதை உண்மை என்று நம்பிய அந்த கிராமத்தை சேர்ந்த 50 பேர், நேற்று இரண்டு வேன்களை பிடித்துக்கொண்டு கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புதூர் பகுதியில் உள்ள வங்கிக்கு செல்ல புறப்பட்டுள்ளனர். அப்போது அவர்களை செல்போனில் தொடர்பு கொண்ட பேசிய குமார், இளையரசனேந்தல் ரோடு சந்திப்பு அருகே உள்ள காளியம்மன் கோவிலுக்கு வந்த தன்னை சந்திக்குமாறு கூறி அவர்களை அங்கு வரவழைத்துள்ளார். அங்கு வந்த அவர்களிடம், 20 பேரிடம் தலா ரூ.1500-மும், 30 பேரிடம் தலா ரூ.2000-மும் என மொத்தம் ரூ.90 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு, வங்கியில் செலுத்திவிட்டு வருவதாக கூறி புறப்பட்டுள்ளார் குமார். அவரின் இந்த நடவடிக்கையின் மீது சந்தேகம் கொண்ட வேன் டிரைவர் பசுபதிராஜ், தானும் அவருடன் வருவதாக கூறி குமாருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

undefined

வங்கிக்கு அருகில் சென்றதும் பசுபதிராஜை வண்டியைவிட்டு இறங்க சொன்ன குமார், செல்போனில் பேசியபடியோ வாகனத்தை மின்னல் வேகத்தில் ஓட்டிச் சென்றுள்ளார். விரட்டிச் சென்று அவரை பிடிக்க முயன்ற போதும் குறுக்கும் நெடுக்குமாக இருந்த தெருக்களில் பகுந்து அவர் தப்பித்துச் சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வேன் டிரைவர் பசுபதி, அக்கிராம மக்களிடம் இச்செய்தியை கூறி அனைவரும் ஒன்றாக சேர்ந்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இந்த புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறை முதற்கட்ட நடவடிக்கையாக குமாரின் புகைப்படத்தையும், அவர் தப்பிச் செல்ல உபயோகப்படுத்திய வாகனத்தின் எண்ணை வைத்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Intro:மத்திய அரசு திட்டத்தின் பெயரை கூறி கிராம பெண்களிடம் ரூ.90 ஆயிரம் மோசடி - வாலிபரை போலிஸ் தேடுகிறது

Body:நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நகரம், முத்துசாமிபுரம் ஆகிய கிராமங்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சென்றுள்ளார். அவர் அங்குள்ள கிராம பெண்களிடம் தன்னை குமார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். இதை தொடர்ந்து பேசிய அவர்,

தான் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் புதிதாக தொடங்கப்பட உள்ள தனியார் வங்கி கிளையின் அலுவலர் என கூறினார். மேலும் அந்த தனியார் வங்கியின் சார்பில் மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த பெண்களுக்கு தலா ரூ. 1லட்சம் கடன் வழங்க உள்ளதாகவும், அந்த கடனை பெற்ற பின்னர் மாதம்தோறும் அந்த கடன் தொகையை தவணை முறையில் ரூ. 3150 வீதம் 40 மாதங்கள் செலுத்தினால் போதும் என கூறி உள்ளார்.

இந்த கடன் திட்டமானது மத்திய அரசின் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. எனவே விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதால் தேர்தலை ஒட்டி மத்திய அரசு இந்த வங்கி கடன்களை தள்ளுபடி செய்யவும் வாய்ப்பு உள்ளது என ஆசை வார்த்தை கூறி உள்ளார்.

இதனை உண்மை என்று நம்பிய கிராம மக்கள் வங்கியின் மூலமாக கடன் பெறுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து கிராம மக்கள் 50 பேர் நேற்று இரண்டு வேன்களில் கோவில்பட்டி புறப்பட்டு சென்றனர். கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புதூர் பகுதியில் சென்ற போது அவர்களை குமார் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர்களை கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோடு சந்திப்பு அருகே உள்ள காளியம்மன் கோவிலுக்கு அழைத்து வந்து அங்கு வைத்து கடன் விண்ணப்ப படிவத்தில் கிராம பெண்களிடம் கையொப்பம் வாங்கி உள்ளார்.

தொடர்ந்து கடன் பெற விருப்பம் உள்ள பெண்களிடம் அடையாள அட்டை நகல்களையும் பெற்றுக்கொண்ட அவர் கிராம மக்களை வேன்களில் கோவில்பட்டி ரயில் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு முத்துசாமி புரத்தைச் சேர்ந்த கிராம பெண்கள் 30 பேரிடம் தலா ரூ.2000, நகரம் கிராமத்தைச் சேர்ந்த பெண்களிடம் பெண்கள் 20 பேர் இடம் தலா ரூ.1500 பெற்றுக்கொண்ட குமார், மொத்தத் தொகை ரூ.90 ஆயிரத்தை கோவில்பட்டி புதுரோட்டில் உள்ள வங்கியில் செலுத்தி விட்டு வருவதாக கூறியுள்ளார்.

குமாரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த வேன் டிரைவர்களுள் ஒருவரான பசுபதி ராஜ் என்பவர் குமாருடன் மோட்டார் சைக்கிளில் வருவதாக கூறினார். இதை ஏற்றுக்கொண்ட குமார், பசுபதி ராஜை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றார்.

தொடர்ந்து கோவில்பட்டி புதுரோடு தனியார் வங்கி முன்பாக மோட்டார் சைக்கிளை நிறுத்திய குமார், அங்கு பசுபதி ராஜா கீழே இறங்கச் சொல்லி உள்ளார்.

இதை தொடர்ந்து செல்போனில் பேசியபடியே குமார் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளை இயக்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பசுபதி ராஜ், குமாரை விரட்டி சென்று பிடிக்க முயன்றார்.

ஆனால் அவர் தெருக்களின் வழியே மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பிச் சென்று விட்டார். இந்த தகவலை பசுபதி ராஜ் வேன்களில் வந்த மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கிராம பெண்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை குறித்து கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

கிராம மக்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கிராம மக்களிடையே மத்திய அரசு திட்டத்தின் பெயரை கூறி ரூ. 90 ஆயிரத்தை மோசடி செய்த வாலிபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்டமாக, குமாரின் புகைப்படம் மற்றும் அவர் ஒட்டி வந்த மோட்டார்சைக்கிள் எண் ஆகியவற்றை கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.