ETV Bharat / state

மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தப்பியோட்டம்! - எட்டயபுரம்

தூத்துக்குடி: குடும்பத் தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவனை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

women killed near tuticorin
author img

By

Published : Jun 10, 2019, 10:33 AM IST

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் நடுவப்பட்டி ஆறுமுக முதலியார் தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி (35). இவர் கறிக்கடையில் வேலை பார்த்துவருகிறார். இவரது மனைவி முனீஸ்வரி (32). இவர்களுக்கு முகேஷ் (11) என்ற மகனும், மஞ்சு (9) என்ற மகளும் உள்ளனர்.

இன்று மாலை மதுபோதையில் வீட்டுக்கு வருகை தந்த கருப்பசாமியை, அவரது மனைவி முனீஸ்வரி கண்டித்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த கருப்பசாமி மனைவி முனீஸ்வரியை அரிவாளால் தலையின் பின்பக்கம், காதுப்பகுதியில் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த முனீஸ்வரி வீட்டிலேயே ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார். சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்த அண்டை வீட்டுக்காரர்கள், ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த முனீஸ்வரியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து எட்டயபுரம் காவல்நிலையத்திற்கு கொலை சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர்.

கருப்பசாமி
கருப்பசாமி

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தப்பியோடிய கருப்பசாமியை தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி

எட்டயபுரம் நடுவப்பட்டியில் கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் மதுபோதையில் இருந்த கணவர் மனைவியை அரிவாளால் வெட்டியதில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

எட்டயபுரம் நடுவப்பட்டி ஆறுமுக முதலியார் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 35). கறிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி முனீஸ்வரி (32). இவர்களுக்கு முகேஷ் (11) என்ற மகனும், மஞ்சு (9) என்ற மகளும் உள்ளனர். இன்று மாலை மதுபோதையில் வீட்டுக்கு வருகை தந்த கருப்பசாமியை அவரது மனைவி முனீஸ்வரி கண்டித்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த கருப்பசாமி மனைவி முனீஸ்வரியை அரிவாளால் தலையின் பின்பக்கம் மற்றும் காதுப்பகுதியில் வெட்டி விட்டு பைக்கில் தப்பி சென்றுள்ளார். இதில் பலத்த காயமடைந்த முனீஸ்வரி வீட்டிலேயே ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இது தொடர்பாக எட்டயபுரம் காவல்நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கருப்பசாமியை தேடி வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.