வீரபாண்டிய கட்டபொம்மனின் 221ஆவது நினைவுதினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் கட்டபொம்மன் திருவுருவச் சிலைக்கு ஓய்வுபெற்ற தலைமைச் செயலர் ராம் மோகன் ராவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "தலைமைச் செயலகத்தில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்திய சம்பவம் தவறான நடவடிக்கை. யார் செய்தார்கள் என்று எனக்குத் தெரியாது. தேவையில்லாமல் என் மீது ஒரு பெரிய பழியை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
யார் செய்தார்கள் என்றாலும் எனக்கு கவலை இல்லை. நான் சுத்தமானவன். ஜெயலலிதாவின் இறப்புக்குப் பிறகு ஏதோ நடந்திருக்கிறது. என்ன நடந்தது, யார் என்ன நினைத்தார்கள் என்று தெரியவில்லை.
நான் யாரையும் பழிசுமத்த விரும்பவில்லை. ஆனால் அதில் ஒரு சதி நடந்திருக்கிறது. இப்போது சொல்ல முடியாது. நேரம் வரும்போது நான் சொல்வேன்" என்றார்.
இதையும் படிங்க: ஈரோட்டில் உர வியாபாரி வீட்டில் ரெய்டு - ரூ.4 கோடி பறிமுதல்!