ETV Bharat / state

சவுதியில் இருந்து கணவரின் உடலை மீட்க கோரி மனைவி மனு - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்

சவுதி அரேபியாவில் மர்மமான முறையில் இறந்த கணவரின் உடலை மீட்கக் கோரி மனைவி மற்றும் குழந்தை கண்ணீர் மல்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

சவுதியில் இருந்து கணவரின் உடலை மீட்க கோரி மனைவி மனு

author img

By

Published : Dec 26, 2022, 10:40 PM IST

சவுதியில் இருந்து கணவரின் உடலை மீட்க கோரி மனைவி மனு

தூத்துக்குடி: முள்ளக்காடு அருகே சாமி நகரைச் சேர்ந்தவர் அந்தோணி ராஜ். இவர் சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய் நிறுவனத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி இவர் இறந்து விட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 11 நாள்கள் கழிந்த நிலையில், அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவில்லை.

இதற்கிடையில், சவுதி அரேபியாவில் தனது கணவர் அந்தோணி ராஜ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது உடலை உடனே மீட்டுத் தர வேண்டும் என்றும், அவரது மனைவி ஜெயமாரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மனு அளித்துள்ளார். இந்த மனு மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று (டிசம்பர் 26) ஜெயமாரி தனது பெண் குழந்தை, உறவினர்கள் மற்றும் ஊர் மக்களுடன் சென்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும், மாவட்ட நிர்வாகம் உடனடியாக அந்தோணி ராஜின் மருத்துவ சான்றிதழை வாங்கி தர வேண்டும் என்றும் உடலை உடனடியாக மீட்டுத் தர வேண்டும் என்றும், உரிய நிவாரணத் தொகை பெற்றுத் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க: ஜே.பி.நட்டா கோவை பயணத்திற்கு எதிர்ப்பு - கிராம மக்கள் எதிர்ப்புக் கொடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.