ETV Bharat / state

‘செம்மொழிகளில் உயிர்ப்போடு இருப்பது தமிழ் மொழி மட்டுமே’ - கனிமொழி

தூத்துக்குடி: செம்மொழிகளில் உயிர்ப்போடு இருக்கும் மொழி தமிழ் மட்டும்தான், நாம் அனைவரும் தமிழ் மொழியில் பேச பெருமைப்பட வேண்டும் என்று கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.

kanimozhi
author img

By

Published : Aug 17, 2019, 9:49 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணாவின் 111ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கவிதை ஒப்புவித்தல் போட்டி நடத்தப்பட்டது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியில், கனிமொழி எம்பி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.

மாணவர்களிடம் உரையாற்றிய கனிமொழி

அப்போது மாணவர்களிடையே பேசிய கனிமொழி, ‘தமிழ்மொழியில் பேசுவதை நாம் பெருமையாக கருத வேண்டும். லத்தீன், கிரேக்கம், சமஸ்கிருதம் உள்ளிட்ட பல்வேறு மொழிகள் இருக்கின்றன. ஆனால் இந்த மொழிகள் அனைத்தும் பேசப்படும் மொழியாக இல்லை. சமஸ்கிருதம் கோயில்களில் பூஜை செய்யும் மொழியாக மட்டுமே உள்ளது. இன்றும் உயிரோடும், உயிர்ப்போடும் இருக்கும் ஒரே மொழி தமிழ் மட்டுமே என்ற பெருமை உள்ளது. தமிழின் தொன்மையை மட்டுமின்றி தொடர்ச்சியாக இந்த தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் நாம் பாடுபட வேண்டும்’ என தெரிவித்தார்.

Intro:செம்மொழிகளில் உயிர்ப்போடு உள்ள மொழி தமிழ் - பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் ஒப்புவித்தல் போட்டியில் கனிமொழி எம்பி பேச்சுBody:தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்த நாளை முன்னிட்டு முரசொலி அறக்கட்டளை சார்பில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டி தூத்துக்குடியில் உள்ள பள்ளியில் நடைபெற்றது தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியில் பாராளுமன்ற திமுக குழு துணைத் தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பி கலந்து கொண்டு இந்த போட்டிகளை தொடங்கி வைத்தார் இதை தொடர்ந்து கலந்து கொண்ட மாணவ மாணவியர் பாரதிதாசனின் பாடல்களை பாடி அனைவரையும் கவர்ந்தனர் இதைத் தொடர்ந்து பேசிய கனிமொழி எம்பி தமிழ்மொழி செம்மொழி இந்த தமிழ் மொழியை பேச நாம் பெருமை பெற்றவர்கள் நாட்டில் பல மொழிகள் லத்தீன் கிரேக்கம் சமஸ்கிருதம் உள்ளிட்ட பல்வேறு மொழிகள் செம்மொழிகளாக இருக்கின்றன ஆனால் பேசப்படும் மொழியாக இல்லை சமஸ்கிருதம் கோயில்களில் பூஜை செய்யும் மொழியாக மட்டுமே உள்ளது இன்றும் உயிரோடும் உயிர்ப்போடும் இருக்கும் மொழி தமிழ் மொழி என்ற பெருமை தமிழ் மொழிக்கு மட்டும்தான் உள்ளது தமிழ் பேசக்கூடிய பெருமையை நமக்கு உள்ளது தமிழின் தொன்மையை மட்டுமின்றி தொடர்ச்சியாக இந்த தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வகையில் நாம் பாடுபட வேண்டும் என தெரிவித்தார் இந்த நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன்மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.