இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
’யுனெஸ்கோ அமைப்பின் அறிவிப்பின்படி உலகம் முழுவதும் அக்டோபர் 4ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை உலக விண்வெளி வாரம் கடைபிடிக்கப்படுகின்றது. 1957ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி விண்வெளி பற்றிய ஆராய்ச்சிக்காக கோள்களைப் பற்றி அறிய ஸ்புட்னிக் என்ற செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டதை நினைவுகூறும் விதமாக இந்த உலக விண்வெளி வாரம் கொண்டாடப்படுகிறது.
அதன் பொருட்டு தூத்துக்குடியில் வ.உ. சிதம்பரனார் கல்லூரி, மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் இணைந்து தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் கல்லூரியில் அக்டோபர் 9,10,11 ஆகிய தேதிகளில் விண்வெளி விளக்கக் கண்காட்சி நடத்தப்பட இருக்கிறது.
இந்த கண்காட்சியின் நோக்கமானது விண்வெளி பற்றி அனைத்து மக்களும் தெரிந்துகொள்ள வேண்டும், விண்வெளி சார்ந்த படிப்புகளை மாணவ-மாணவிகள் தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும் என்பதற்காகவும் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும் இளைஞர்களை விண்வெளி துறையில் சேர்ந்திட இளைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு நடத்தப்படுகிறது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை சிவதாணுபிள்ளை, வனிதா முத்தையா உள்ளிட்டோர் போல தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் விண்வெளி துறையில் சாதிக்க வேண்டும்.
விண்வெளி விளக்க கண்காட்சியானது காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். இந்தக் கண்காட்சியில் விண்வெளி ராக்கெட், வானில் உள்ள கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றை பூமியிலிருந்து பார்க்கும் படியான தொலைநோக்கி மாதிரிகள் வைக்கப்பட உள்ளது.
எனவே இந்த கண்காட்சியில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும், பொதுமக்களும் ஆர்வத்துடன் கலந்துகொள்ள வேண்டும்’ என்றார்.
இதையும் படிங்க: தூத்துக்குடி கல்லூரி மாணவன் கொலை வழக்கில் 2 சகோதரர்கள் கைது!