ETV Bharat / state

மழை வேண்டி பொம்மைக்கு செருப்படி.. தூத்துக்குடி மக்களின் விநோத வழிபாடு! - thoothukudi viral news

தூத்துக்குடியில் மழை பெய்ய வேண்டி கொடும்பாவியை செருப்பால் அடித்தும் அதனை எரித்தும் மக்கள் விநோதமாக வழிபட்டுள்ளனர்.

மழை வேண்டி கொடும்பாவியை எரித்த கிராம மக்கள்..

author img

By

Published : Nov 27, 2022, 2:49 PM IST

தூத்துக்குடி: ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி, கயத்தார், எட்டயபுரம் மற்றும் விளாத்திகுளம் ஆகிய தாலுகாக்களில் சுமார் 1,70,000 ஹெக்டேர் பரப்பளவிலான மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் உளுந்து, கம்பு, பாசி, வரகு, கேழ்வரகு, மக்காச்சோளம், பருத்தி மற்றும் மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

இந்த பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை நம்பியே விவசாயம் நடைபெறுகிறது. ஆனால் இந்த ஆண்டு சரியாக மழை பெய்யாததால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இதனால் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்குட்பட்ட செக்காரக்குடி கிராமத்தில், கொடும்பாவியை தெருத்தெருவாக இழுத்து செருப்பு மற்றும் துடைப்பத்தால் அடித்தும், ஒப்பாரி பாடல் பாடியும் கொடும்பாவியை எரித்தனர்.

இந்த சடங்கின் மூலம் மழை பெய்யும் எனவும், விவசாயம் செழிக்கும் எனவும் மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து செக்காரக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் ராமலெட்சுமி கூறுகையில், “தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்த வரையில் இறவை பாசன விவசாயத்தைவிட மானாவாரி விவசாயமே அதிக பரப்பளவில் நடக்கிறது. சிறுதானியங்கள், பருத்தி, மிளகாய்தான் இங்கு பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. சித்திரை மாதமே கோடை உழவு ஒட்டி மழைக்காகக் காத்திருந்தோம். ஆவணி மாதத்தில் ஒரு மழையும், புரட்டாசியில் ஒரு மழையும் மட்டுமே பெய்தது. ஆவணியில் பெய்த மழையை நம்பி சில பகுதிகளில் விதைத்தோம்.

தூத்துக்குடியில் மழை பெய்ய வேண்டி கொடும்பாவியை எரித்து மக்கள் வழிபட்டுள்ளனர்

முளைத்தும் முளைக்காமல் இருந்தது. இதேபோல் பருவமழை பெய்யத் தாமதமானால், கிராமங்களில் கொடும்பாவி எரித்து ஒப்பாரி வைத்தல், மழைக்கஞ்சி வழிபாடு, தவளை கல்யாணம், கழுதை கல்யாணம் போன்ற மழைச்சடங்குகளை நடத்துவார்கள். எங்கள் கிராமத்தில் கொடும்பாவி எரிப்பதுதான் வழக்கம்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “சென்ற வாரம் ஊர் கூட்டம் போட்டு மழைக்காக கொடும்பாவி எரிப்பது என முடிவெடுத்தோம். ஊருக்கு நடுவில் கொடும்பாவி உருவத்தை தயார் செய்தோம். கரகாட்ட கலைஞர்கள் ஒப்பாரி பாடல்களைப் பாடிக்கொண்டே நெஞ்சில் அடித்து அழுவார்கள். அப்படியே கொடும்பாவி உருவத்தை கயிறால் கட்டி ஊரிலுள்ள அனைத்து தெருக்கள் வழியாக இழுத்துச் சென்றோம். வழி நெடுகிலும் ஒவ்வொரு வீட்டு முன்பு நிற்பவர்கள் செருப்பாலும், துடைப்பத்தாலும் அடித்தார்கள். ஊருக்கு வெளியே கொடும்பாவி உருவத்தை எடுத்துச் சென்று தீயிட்டு கொளுத்தினோம். இதனால் ஓரிரு நாளில் மழை வரும் என்பது எங்களின் நம்பிக்கை” என்று கூறினார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் நான்கு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.