தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்றிரவு (ஜன.21) சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்தார். கோயிலில் இன்று அதிகாலை 5 மணிக்கு விஸ்வரூப தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து கோயிலிலுள்ள ஆனந்தவிலாஸ் மண்டபத்தில் வைத்து சத்ரு சம்ஹார யாகம் நடத்தினார்.
சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த யாகத்தில் தொடர்ந்து சூரசம்ஹார மூர்த்தி சன்னதியில் எதிரிகளை வெல்லக்கூடிய சத்ரு சம்ஹார பூஜை நடத்திச் சிறப்பு வழிபாடு செய்தார். சிறப்பு யாகம் மற்றும் பூஜைகளைப் படம் எடுக்கச் செய்தியாளர்கள் உட்பட யாரும் அனுமதிக்கப்படவில்லை.
தொடர்ந்து செய்தியாளர்களையும் சந்திக்க மறுத்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். வரும் ஏப்ரல் 14 -ம் தேதி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திருச்செந்தூரிலிருந்து யாத்திரை பயணம் தொடங்க உள்ள நிலையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சிறப்பு யாகம் நடத்தி வழிபாடு செய்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; எந்த கூட்டணியில் யார் யார்?