தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஞானராஜ், காவலர்களுடன் சேர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திருச்செந்தூர் மெயின் ரோட்டிலுள்ள, தனியார் திருமண மண்டபத்துக்கு அருகில் சந்தேகிக்கும் இரு நபர்கள் நடந்து சென்றுள்ளனர்.
இதனால் அவர்களைப் பிடித்து விசாரிக்கையில், அவர்களின் பெயர் ராஜேஸ் கண்ணன்(22), விஜயபாலன்(22) எனவும், இருவரும் போல்டன் புரத்தில் கஞ்சா விற்பனை செய்து வந்ததுள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவர்கள் இருவரையும் கைதுசெய்த காவல் துறையினர் அவர்கள் வைத்திருந்த 1.600 கி.கி. கஞ்சா பொட்டலங்களையும் கைப்பற்றினர்.
இதையும் படிங்க: