ETV Bharat / state

பெட்ரோல் பங்க் டீலர்ஷிப் வாங்கித்தருவதாகக்கூறி பண மோசடி செய்த இருவர் கைது! - petrol pump dealership

கோவில்பட்டி அருகே கயத்தாறைச்சேர்ந்த ஒருவரிடம் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் பெயரில், பெட்ரோல் பங்க் டீலர்ஷிப் வாங்கித் தருவதாகப் பண மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

பெட்ரோல் பங்க் டீலர்ஷிப் வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த இருவர் கைது

author img

By

Published : Aug 10, 2022, 3:51 PM IST

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாறு ஆரோக்கிய மாதா கோவில் தெருவைச்சேர்ந்தவர், குணசேகரன்(56), விவசாயம் மற்றும் ஆயில் மில் நடத்தி வருகிறார். இவரது மனைவி குமரவல்லி வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், குணசேகரன் பெட்ரோல் பங்க் வைப்பதற்காக முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில், இணையத்தில் பாரத் பெட்ரோலியம் என்ற பெயர் சம்மந்தமாக தேடும்போது பெட்ரோல் பம்ப் டீலர்ஷிப் பெட்ரோலியம் என்ற பெயரில் ஒரு இணையதளம் இருந்துள்ளது. அந்த இணையதளத்தில் தனது விவரங்களைப் பதிவு செய்துள்ளார்.

பதிவு செய்து சிறிது நாட்களில் பாஸ்கர் என்ற பெயரில் குணசேகரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டுப்பேசியுள்ளனர். அப்போது பாரத் பெட்ரோலியம் நிறுவனம் மார்க்கெட்டிங் பிரிவிலிருந்து தாங்கள் பேசுவதாகவும், பெட்ரோல் பங்க் டீலர்ஷிப் பெறுவதற்கு அவரது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள், தகுதிச் சான்று, வங்கி விபரங்கள் உட்பட அனைத்து ஆவணங்களையும் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்புமாறு கூறியதால், குணசேகரன் அவற்றை அனுப்பியுள்ளார்.

பின்னர் தங்கள் கணக்கிற்கு ரூ.19,500 செலுத்த வேண்டும் என பாரத் பெட்ரோலியம் என்ற ஒரு வங்கிக்கணக்கை வழங்கி உள்ளனர். அந்த வங்கிக்கணத்தில் குணசேகரன் பணத்தைக் கட்டியுள்ளார். பின்னர் சிறிது நாட்கள் கழித்து மீண்டும் குணசேகரனைத்தொடர்புகொண்ட அந்த நபர்கள் டீலர்ஷிப் சான்று பெறுவதற்காக ரூபாய் ரூ.1,10,000 செலுத்துமாறு கூறியுள்ளனர்.

குணசேகரன் அதனையும் கட்டியுள்ளார். மேலும் அதனைத் தொடர்ந்து உரிமம் பெறுவதற்காக ரூ.3,50,000 பணம் கேட்டதால் சந்தேகமடைந்த குணசேகரன் விசாரித்து பார்த்தபோது, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து நேஷனல் சைபர் க்ரைமில் புகார் செய்துள்ளார். குணசேகரன் அளித்த புகாரின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் தனிப்படை அமைத்து மோசடி செய்தவர்களை தேடிவந்தனர்.

மேலும் இதுகுறித்து தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் இணையதளத்தை உருவாக்கியவர் மேற்கு வங்காள மாநிலத்தைச்சேர்ந்த நாரோட்டம் சுபோஜித் குமார் ராய் (33) என்பதும், மேற்படி மோசடிக்கு உடந்தையாக இருந்த சுமன் மண்டல் (36) என்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து தனிப்படையினர் மேற்கு வங்காள மாநிலம் சென்று வெவ்வேறு இடங்களில் இருந்த இருவரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 செல்போன்கள் மற்றும் ஒரு கணினி, CPU ஆகியவற்றைப் பறிமுதல் செய்து அங்குள்ள நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தி தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவில்பட்டி அருகே விவசாயிடம் பாரத் பெட்ரோலியம் பங்க் டீலர்ஷிப் என்ற பெயரில் பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நிலம் கையகப்படுத்தும் உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.