ETV Bharat / state

ஓட்டப்பிடாரம் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக கனிமொழி பரப்புரை! - dmk

தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் தொகுதியின் திமுக வேட்பாளர் சண்முகையாவுக்கு ஆதரவாக கனிமொழி பரப்புரையில் ஈடுபட்டார்.

kanimozhi
author img

By

Published : Apr 28, 2019, 7:28 AM IST

ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதியின் இடைத்தேர்தலில் திமுக சார்பில் வழக்கறிஞர் எம்.சி. சண்முகையா போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் கனிமொழி நேற்று பரப்புரை மேற்கொண்டார்.

கனிமொழி பரப்புரை

அப்போது அவர் பேசுகையில், “மக்களுக்காக உழைக்கக் கூடிய ஒரு நல்ல வேட்பாளரை உங்கள் முன் நிறுத்தியுள்ளோம். இந்த தொகுதியில் நிலவிவரும் தண்ணீர் பிரச்னை, வேலையில்லா திண்டாட்டம், கல்வி பிரச்னை உள்ளிட்ட அனைத்திற்கும் இவரால் தீர்வு அளிக்க முடியும்.

தமிழ்நாட்டிற்கு ஒரு நன்மையையும் செய்திடாத மோடி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என அதிமுக வாக்கு கேட்கிறது. ஜிஎஸ்டி வரி விதிப்பின் மூலம் இங்குள்ள தொழில்களை எல்லாம் அவர்கள் அழித்துவிட்டார்கள். கடந்த ஐந்து ஆண்டு காலங்களில் ஒரு குளம்கூட தூர்வாரப்படவில்லை. இங்கே, தூத்துக்குடியில் உள்ள அனைத்து குளங்களும் மேடு தட்டாக மாறி கிடக்கின்றன. இது அனைத்தையும் ஒழுங்குப்படுத்த திமுக வேட்பாளருக்கு வாக்களியுங்கள்” என்றார்.

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்படைய தொடங்கியுள்ளது. ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளராக வழக்கறிஞர் எம்.சி. சண்முகையா நிறுத்தப்பட்டுள்ளார். நேற்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து தூத்துக்குடி கே.வி.கே. சாமி நகர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அதைத் தொடர்ந்து இன்று ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட சிலுவைபட்டி, முருகன் தியேட்டர் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இரண்டாவது கட்டமாக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். இதில் திமுக மாநிலங்களவை உறுப்பினரும், திமுக மாநில மகளிர் அணி செயலாளருமான கனிமொழி கலந்துகொண்டு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் வேட்பாளர் சண்முகையாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பொழுது அவர் பேசுகையில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் வேட்பாளராக சண்முகையா, திமுக தலைவர் ஸ்டாலின் தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளார். மக்களுக்காக உழைக்க கூடியவர். மக்களோடு மக்களாக நின்று பணியாற்றக் கூடியவர் வேட்பாளர் சண்முகையா.
நடைபெறும் இடைத்தேர்தல்  தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதிமுக ஆட்சியை மாற்றுவதற்கான தேர்தல்.
இந்த தொகுதியிலே நீண்ட நாட்களாக யாருக்கும் வேலை கிடைக்கவில்லை. இதுதவிர பள்ளிக்கூடங்களில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. மீனவர்கள் நல அங்காடிகள், மீன் விற்பனை கூடங்கள், சாலை வசதி, குடிநீர் வசதி போன்றவை எதுவும் சரிவர செய்து தரப்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டினர். நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதிமுக ஆட்சியில் இவை எல்லாம் தீர்த்து வைக்க முடியாத பிரச்சனைகளாக நீண்டுகொண்டே போகிறது. திமுக ஆட்சி அமைந்தவுடன் மக்கள் கூறிய பிரச்சனைகள் அனைத்தும் தீர்த்து வைக்கப்படும். ஓட்டப்பிடாரம் தொகுதியில் பொதுமக்களுக்கு பயன்பாட்டுக்கென குடிநீர் தொட்டி அமைத்து தரப்படும்.

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதிமுக ஆட்சி மத்தியிலே இருக்கக்கூடிய பாஜகவின் ஆட்சிக்கு துணை போகிறார்கள். தமிழ்நாட்டில் நடந்த எந்தப் பிரச்சினைக்கும் எட்டிப்பார்க்காத பிரதமர் மோடியின் ஆட்சிக்கு நாங்கள் தொடர்ந்து காவடி தூக்கி கொண்டே இருப்போம் என்பதை உறுதி செய்யும் வகையில் நேற்று பிரதமர் வாரணாசி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த போது, தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் விமானம் மூலம் அங்கு சென்று அவருக்கு வாழ்த்துக் கூறிவிட்டு வந்திருக்கிறார்கள்.

ஜிஎஸ்டி வரி விதிப்பின் மூலம் இங்குள்ள தொழில்களை எல்லாம் அவர்கள் அழித்துவிட்டார்கள். கடந்த ஐந்து ஆண்டு காலங்களில் ஒரு குளம் கூட தூர்வாரப்படவில்லை. இங்கே தூத்துக்குடியில் உள்ள அனைத்து குளங்கள் மேடு தட்டாக மாறி கிடக்கின்றன.

தண்ணீர் பிரச்சனை, வேலையில்லா திண்டாட்டம், கல்வி பிரச்சனை உள்ளிட்டவை அனைத்தும் தீர்க்கப்படவேண்டும். இவையெல்லாம் செய்வதற்கு ஆட்சி மாற்றம் வரவேண்டும். தமிழகத்திலே தளபதி மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்ததும் மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும். இங்கே புதியம்புத்தூரில் ஆயத்த ஆடை ஜவுளி விற்பனையகம், நீதிமன்றம், மீனவ கிராமங்களில் தூண்டில் பாலம் ஆகியவை அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும். குளங்கள் அனைத்தும் தூர்வாரி பாசன வடிகாலுக்கு வழிவகை செய்யப்படும். குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு காங்கேயன் கால்வாய் திட்டம் விரைந்து செயல்படுத்தப்படும். மேலும் மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படும். வங்கியில் 5 சவரனுக்கு குறைவாக நகை கடன் வைத்திருப்போரின் கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் உள்பட பல்வேறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட உதயசூரியனுக்கு வாக்கு தாருங்கள் என்றார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Visual FTP.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.