ETV Bharat / state

தூத்துக்குடியில் 144 தடை - ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த ஆறு பேர் கைது

author img

By

Published : Sep 23, 2019, 10:51 PM IST

தூத்துக்குடி: வெங்கடேச பண்ணையாரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ள நிலையில் ஆத்தூர் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த ஆறு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

six guys arrested

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள அம்மன்புரத்தில் வெங்கடேச பண்ணையாரின் 16ஆம் ஆண்டு நினைவு தினம் வருகின்ற செப்டம்பர் 26ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல் இருக்க, சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளை காப்பதற்கு செப்-25ஆம் தேதி மாலை 6 மணி முதல் 27ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை பிறப்பித்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட கத்தி
கைப்பற்றப்பட்ட கத்தி

மேலும், மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் மற்றும் பழைய குற்றவாளிகளின் நடமாட்டமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆத்தூர் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சிலர் சுற்றி திரிவதாக காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் அரிவாள், பட்டாக்கத்தி ஆகிய பயங்கர ஆயுதங்களுடன் காரில் சுற்றி திரிந்த ஆறு பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Intro:வெங்கடேச பண்ணையாரின் நினைவு தினம்:
தூத்துக்குடியில் 144 தடை - பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 6 பேர் கைது
Body:

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள அம்மன்புரத்தில் வெங்கடேச பண்ணையாரின் 16-வது ஆண்டு நினைவு தினம் வருகிற 26-ஆம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருப்பதற்காகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுப்பதற்கும் தூத்துக்குடி மாவட்ட முழுவதற்கும் வருகிற 25ஆம் தேதி மாலை 6 மணி முதல் 27ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் மற்றும் பழைய குற்றவாளிகளின் நடமாட்டமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆத்தூர் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சிலர் சுற்றி திரிவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு விரைந்து சென்று போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெட்டரிவாள், பட்டாக்கத்தி ஆகிய பயங்கர ஆயுதங்களுடன் காரில் சுற்றி திரிந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் பசுபதி பாண்டியனின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது.

வருகிற 26 ஆம் தேதி வெங்கடேச பண்ணையாரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ள நிலையில் ஆத்தூர் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 6 பேர் கைது செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பும், கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.