ETV Bharat / state

பனிமய மாதா ஆலய 439ஆவது ஆண்டு பெருவிழா: பக்தர்கள் இன்றி நடத்திட முடிவு! - tuticorin panimaya matha church function

பனிமய மாதா ஆலய 439ஆவது ஆண்டுப் பெருவிழா, இந்தாண்டும் பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெறும் என மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

panimaya matha church
மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை
author img

By

Published : Jul 22, 2021, 4:55 PM IST

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய பனிமய மாதா பேராலயத்தின் 439ஆவது ஆண்டுப் பெருவிழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை, ஆலய பங்குத்தந்தை குமார் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பக்தர்கள் இன்றி கொடியேற்றம்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டீபன் ஆண்டகை, "பிரசித்தி பெற்ற பனிமய மாதா பேராலயப் பெருவிழா, ஆண்டுதோறும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 5 வரை 11 நாள்கள் விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு 439ஆவது ஆண்டுப் பெருவிழா வரும் 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

கரோனா ஊரடங்கால் பக்தர்கள் பங்கேற்பின்றி கொடியேற்றம் நடைபெறவுள்ளது. அப்போது, அதிகாலை 5.30 மணிக்கு சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது.

தொடர்ந்து காலை 7 மணியளவில் பேராலயம் முன்புள்ள கொடிமரத்தில் அன்னையின் திருக்கொடியை ஆயர் ஏற்றி வைக்கிறார்.

பனிமய மாதா ஆலய 439ஆவது ஆண்டுப் பெருவிழா

தொலைக்காட்சியில் ஒளிபரப்பு

கரோனா கட்டுப்பாடுகளால் ஆலயத்தில் திருவிழா திருப்பலி, நற்கருணை ஆசீர், சப்பர பவனி, கொடி பவனி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறாது.

பெருவிழா சிறப்பு திருப்பலிகள், ஆராதனைகள் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகள் ஆன்லைன் மூலமாக தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவிழா கடைகள் அமைக்கத் தடை

அதேநேரம் ஆலயத்துக்குள் நடைபெறும் ஜெபமாலை, திருப்பலி, நற்கருணை ஆசீர் உள்ளிட்ட வழிபாடுகள் பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெறும். அரசின் கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பெருவிழா நடைபெற உள்ளதால், இந்தாண்டு ஆலய சுற்று வளாகத்தில் திருவிழா கடைகள் அமைக்க தடை விதிக்கப்படுகிறது' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வாகன கழிவுகளால் உருவாக்கப்பட்ட அழகிய சிற்பங்கள்: சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.