தூத்துக்குடி குமரெட்டியாபுரம் மேற்குத் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் மகன் சண்முகராஜ் (37). இவர் தினமும் காலை 8 மணிக்கு மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று மாலை 6 மணிக்கு வீட்டுக்கு திரும்புவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவர் எருமை மாடுகளை வைத்து பால் கறந்து பிழைப்பு நடத்திவருகிறார்.
இந்நிலையில் வி.வி.டைட்டானியம் பிக்மென்ட்ஸ் ரசாயன ஆலைக்கு முன்பு உள்ள ஓடையில் கிடந்த தண்ணீரை குடித்த மாடு சிறிது நேரத்தில் அவரது கண்னெதிரே சுருண்டு விழுந்து பரிதபமாக உயிரிழந்தது.
ஆலையில் திறந்துவிட்ட ரசாயன தண்ணீர் ஓடையில் கலந்ததே மாடு இறக்க காரணம் என மாட்டின் உரிமையாளர் போலீசில் புகார் மனு அழித்துள்ளார்.
இதனையடுத்து, இந்நிகழ்வு குறித்த தகவல் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. புகாரின் பேரில் சிப்காட் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். மாடு இறந்ததற்கான காரணத்தை அறிய அவற்றை மருத்துவர்கள் குழு பிரேத பரிசோதனை செய்துவருகின்றனர்.