ETV Bharat / state

கனரக வாகனங்கள் இயக்க உரிமம் பெற்ற திருநங்கை!

மாற்றுத் திறனாளிகள் வாகன ஓட்டுநராக பணியாற்றிய திருநங்கை, கனரக வாகனங்களை இயக்குவதற்கான ஓட்டுநர் உரிமத்தை பெற்றுள்ளார்.

transgender got license for heavy vehicles  transgender got license  transgender  heavy vehicles  license for heavy vehicles  thoothukudi news  thoothukudi latest news  கனரக வாகனங்கள்  கனரக வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமம்  ஓட்டுநர் உரிமம்  திருநங்கை  கனரக வாகனங்களை இயக்க உரிமம் பெற்ற திருநங்கை  தூத்துக்குடியில் கனரக வாகனங்களை இயக்க உரிமம் பெற்ற திருநங்கை  தூத்துக்குடி செய்திகள்
திருநங்கை
author img

By

Published : Oct 1, 2021, 1:49 PM IST

தூத்துக்குடி: பேட்டரியால் இயங்கும் மாற்றுத் திறனாளிகள் வாகன ஓட்டுநராக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வருபவர் திருநங்கை சுப்ரியா.

இவர் தூத்துக்குடி மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியரும், தற்போது தமிழ்நாடு சுற்றுலாத்துறை இயக்குநருமான சந்தீப் நந்தூரியால், கருணை அடிப்படையில் திருநங்கை மறுவாழ்வு திட்டத்தின் கீழ், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநராக சுபப்பிரியா பணியில் அமர்த்தப்பட்டவர்.

கனரக வாகனங்களை இயக்க உரிமம் பெற்ற திருநங்கை...

கனரக வாகனத்திற்கான உரிமம்

இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்துகொண்டே கனரக வாகனங்களை இயக்குவதற்கான ஓட்டுநர் பயிற்சியையும் பெற்றுவந்தார்.

இந்நிலையில் தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற சோதனையில் தேர்ச்சி பெற்றார். இதையடுத்து, கனரக வாகனங்களை இயக்குவதற்கான ஓட்டுநர் உரிமத்தை சுப்ரியா பெற்றுக்கொண்டார்.

மேலும் அதனை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜிடம் வழங்கி வாழ்த்து பெற்றார். இதுவரை தமிழ்நாட்டில் கனரக வாகனங்களை இயக்குவதற்கு உரிமம் பெற்ற முதல் மூன்று திருநங்கைகளில் சுப்ரியாவும் ஒருவர்.

நிரந்தர பணியாக மாற்றி தர வேண்டுகோள்

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் உதவியால் கனரக வாகனங்களை ஓட்டுவதற்கான பயிற்சியை கடந்த சில மாதங்களாக பெற்று வந்தேன். தற்போது கனரக வாகனங்களை இயக்கும் சோதனையில் தேர்ச்சி பெற்று உரிமம் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

இதற்கு உறுதுணையாக இருந்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மாவட்ட நிர்வாக அலுவலர்கள், வட்டார போக்குவரத்து அலுவலருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதன்மூலம் என்போன்ற திருநங்கைகளுக்கு நான் ஒரு முன்னுதாரணமாக செயல்பட விரும்புகிறேன்.

எனவே, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்போது ஒப்பந்த அடிப்படையில் நான் செய்துவரும் ஓட்டுநர் பணியை நிரந்தர பணியாக மாற்றி தர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக ஏற்கனவே நான் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோரிடமும் வலியுறுத்தி மனு அளித்துள்ளேன்.

அதன் பேரில் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுத்து தற்போது நான் செய்துவரும் பணியை நிரந்தர பணியாக மாற்றித் தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இதையும் படிங்க: வாகனத்திற்கான ஆவணங்கள் செல்லுபடியாகும் காலம் அக்., 31 வரை நீட்டிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.