தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்டத் தேர்தல் அலுவலர் செந்தில்ராஜன் உத்தரவின்பேரில் தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அதன்படி தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (மார்ச் 16) திருநங்கைகள் மூலமாகத் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் தேர்தலில் 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி கல்லூரி மாணவ மாணவிகள் சார்பில் மெய் சித்திர விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், திருநங்கைகள் முதல்முறை வாக்காளர்களுக்கு தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரம் எவ்வாறு செயல்படுகிறது, நாம் யாருக்கு வாக்களித்தோம் என்பதை எவ்வாறு உறுதி செய்துகொள்வது என்பது குறித்த விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மாவட்டத் தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ் கலந்துகொண்டு தேர்தல் விழிப்புணர்வு திருநங்கைகளின் பங்கு மிக முக்கியம் எனப் பேசினார். இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்துவதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டு கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கிவைத்தார்.
இதையும் படிங்க...18 வயதை எட்டிய முதல் வாக்காளர்களின் வாக்கு எந்த கட்சிக்கு? - ஈடிவி பாரத் கள ஆய்வு