ETV Bharat / state

தூத்துக்குடி - மேலூரில் ஒரு மாதத்திற்கு ரயில்கள் நிற்காது… காரணம் என்ன? - இரட்டை வழி ரயில் பாதை

தூத்துக்குடி - மேலூர் ரயில் நிலையத்தில் இன்னும் ஒரு மாதத்திற்கு ரயில்கள் நின்று செல்லாது என தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 31, 2023, 8:49 PM IST

தூத்துக்குடி: மதுரை - தூத்துக்குடி இடையிலான இரட்டை வழி ரயில் பாதை மீளவிட்டான் முதல் தூத்துக்குடி ரயில் நிலையம் வரை தண்டவாளங்கள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்பணியில், தூத்துக்குடி - மேலூர் ரயில் நிலையமானது புதிய பேருந்து நிலையம் அருகே இடமாற்றம் செய்யப்படுகிறது. அங்கு ரயில்கள் நின்று செல்லும் வகையில், மேலூர் ரயில் நிலையம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்த பணியை இந்த மாத இறுதிக்குள் முடித்து ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த புதிய ரயில் வழித்தடத்தில் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முயற்சி செய்த போதும் சில பணிகள் முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தப் பணிகளை விரைவுபடுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பணிகளை விரைவுப்படுத்துவதற்கு வசதியாக தூத்துக்குடி - மேலூர் ரயில் நிலையத்தில், நாளை முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு ரயில்கள் இனி நின்று செல்லாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து தூத்துக்குடி வரும் விரைவு ரயில், மைசூரில் இருந்து தூத்துக்குடி வரும் ரயில், திருநெல்வேலி முதல் தூத்துக்குடி வரை இயக்கப்படும் பயணிகள் ரயில் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் அடுத்த மாதம் ஏப்ரல் 30ஆம் தேதி வரை மேலூர் ரயில் நிலையத்தில் நிற்காது என தென்னக ரயில்வேயின் மதுரை கோட்ட இயக்க மேலாளர் ஜோசப் மேத்யூ தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அப்போ சுகப்பிரசவத்திற்கு பேர் போன ஆரம்ப சுகாதார நிலையம்... இப்போ ஒண்ணுமே இல்ல..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.