தூத்துக்குடி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவையின் ஆலோசனைக் கூட்டம், தூத்துக்குடி மத்திய நகர் வியாபாரிகள் சங்கத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அதில், "வரும் மே 5ஆம் தேதி சென்னை தீவுத்திடலில் வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் அடிமை பொருளாதார எதிர்ப்பு மாநாடு நடைபெறவுள்ளது. சில்லறை வணிகத்தில் 100 விழுக்காடு அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டு பொருளாதாரத்தை கொள்ளையடித்துச் செல்கின்றன. அதற்கு நமது தலைவர்களும் துணை நிற்கின்றனர்.
ஜிஎஸ்டி வரிவிதிப்பு என்ற பெயரில் வியாபாரிகளுக்கு அபராதம் விதிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும். தீவுத்திடலில் நடைபெறும் மாநாட்டின் மூலமாக அந்நியப் பொருட்களை வாங்கவோ, விற்கவோ கூடாது என்பதை மட்டும் மக்களிடம் கோரிக்கையாக வைப்போம்" எனக் கூறினார்.
மேலும், சாலையோரக்கடைகளையும், வணிக நிறுவனங்களையும் சாலை விரிவாக்கப் பணிகள், ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் என்ற பெயரில் அழித்து வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: வீரப்பன் சொத்துக்கு மோடி கையெழுத்திட வேண்டும்: திமுக பிரமுகர் மோசடி