தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த டிராக்டர் ஓட்டுநர் சின்னகருப்பசாமி (45) என்பவர், இன்று மலைப்பட்டி பகுதியில் டிராக்டரில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் டிராக்டரை ஓட்டிச் சென்ற சின்னகருப்பசாமி, சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அப்பகுதி மக்கள் நாலாட்டின்புத்தூர் காவல் நிலையத்திற்கு தகவலளித்தனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், விபத்தில் உயிரிழந்த டிராக்டர் ஓட்டுநரின் உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.