ஐதராபாத்: 2024 ஐபிஎல் சீசனில் கே.எல் ராகுல் தலைமையின் கீழ் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி களம் கண்டது. மொத்தம் உள்ள 14 ஆட்டங்களில் தலா 7 வெற்றி, தோல்விகளுடன் புள்ளிப் பட்டியலில் 7வது இடம் பிடித்து பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது. தொடர் நடந்து கொண்டு இருக்கும் போதே கே.எல் ராகுலின் கேப்டன்சியின் மீது அணி நிர்வாகம் கடும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது.
கே.எல் ராகுலின் கேப்டன்சி மீது தொடர்ந்து அணி நிர்வாகம் கேள்வி எழுப்பி வந்ததால் இரு தரப்புக்கும் இடையே முட்டல் மோதல் போக்கு இருந்தது வெளிப்படையாகவே தெரிந்தது. சன்ரைசஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கண்ட தோல்விக்கு கே.எல் ராகுலுடன் லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோங்கே மைதானத்தில் வைத்து கோபமாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவியது.
இந்நிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன் அணிகளின் தக்கவைப்பு பட்டியல் வெளியானது. இதில் லக்னோ அணியின் தக்கவைப்பு பட்டியலில் கே.எல் ராகுலிடன் பெயர் இடம் பெறவில்லை. இரு தரப்பு சமரச பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டு அணியில் இருந்து கே.எல் ராகுல் வெளியேற முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
KL RAHUL WANTS TO RETURN INTO INDIAN T20I TEAM 🔥
— Johns. (@CricCrazyJohns) November 11, 2024
- The mission is on for IPL 2025....!!!!
Don’t miss this exclusive chat on November 12th, 10 PM, only on Star Sports! #IPLAuctionOnStar pic.twitter.com/EKAtV3F4R8
இந்நிலையில், லக்னோ அணியில் இருந்து என்ன காரணத்திற்காக வெளியேறினேன் என்பது குறித்து கே.எல் ராகுல் தன் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.இது குறித்து பேசிய அவர், சமீப காலமாக டி20 பார்மெட்டில் விளையாடவில்லை என்றும் மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுப்பதே தனது இலக்கு என்றார்.
அதற்கு, ஐபிஎல் தான் தனக்கு உதவும் என்றும் ஐபிஎலில் அதிரடியாக விளையாடினால் தான் இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்க முடியும் எனக் கூறினார். கிரிக்கெட் கேரியரை மீண்டும் புதியதாக ஆரம்பிக்க விரும்புவதாகவும் முழு சுதந்திரம் வழங்கும் அணியில் இடம் பெறவே விரும்புவதாகவும் தெரிவித்தார்.
அனைத்தையும் புதியதாக ஆரம்பிக்க விரும்பியதால் தான் லக்னோ அணியில் இருந்து விலகியதாகவும் புதிய இடத்தில் இருந்து, புதிதாக துவங்கினால், சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புவதாகவும் கூறினார். எந்த அணி தன்னை வாங்கினாலும், அதிரடியாக விளையாடி, இந்திய டி20 அணிக்கு கம்பேக் கொடுப்பதே தனது இலக்கு என்று தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியில் இடம் பெற முடியாமல் தவித்து வரும் கே.எல். ராகுல் 2022, 2023, 2024 ஆகிய ஐபிஎல் சீசன்களில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாடி ஆயிரத்து 410 ரன்கள் குவித்துள்ளார். லக்னோ அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரரும் கே.எல்.ராகுல் தான்.
இதையும் படிங்க: ஆணாக இருந்து பெண்ணாக மாறிய பிரபலங்கள்! லிஸ்ட்ல ஜெயிலர் பட ஆளும் இருக்காரு!