ETV Bharat / sports

ஆணாக இருந்து பெண்ணாக மாறிய பிரபலங்கள்! லிஸ்ட்ல ஜெயிலர் பட ஆளும் இருக்காரு! - HORMONE REPLACE SURGERY CELEBRITIES

ஆணாக இருந்து ஹார்மோன் அறுவை சிகிச்சை செய்து பாலின மாற்றம் செய்து கொண்ட பிரபலங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

Etv Bharat
Representative image (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 12, 2024, 8:41 AM IST

ஐதராபாத்: இந்திய அணியின் முன்னாள் வீரரும் மற்றும் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன் தான் பெண்ணாக மாறியதாக சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார். ஹார்மோன் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஆணாக இருந்த ஆர்யன் அனயாவாக மாறியது குறித்தும் தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவு வெளியிட்டு இருந்தார்.

அதைக் கண்ட அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தாலும், நடமுறையில் இது சாதாரணம் என்று கூறப்படுகிறது. அனயாவுக்கு முன்னதாகவே பல்வேறு திரைத் துறை மற்றும் மாடலிங் துறைகளை சேர்ந்த பிரபலங்கள் ஹார்மோன் மாற்ற அறுவை சிகிச்சை மேற்கொண்டு தங்களது பாலினத்தை மாற்றியுள்ளனர். அப்படி பாலின மாற்றம் செய்து கொண்ட சிலர் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

சயீஷா ஷிண்டே:

பாலிவுட்டின் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஸ்வப்னில் ஷிண்டே கடந்த 2021ஆம ஆண்டு பாலின மாற்ற அறவை செய்து கொண்டு திருநங்கையாக மாறினார். அதைத் தொடர்ந்து தனது பெயரையும் சயீஷா ஷிண்டே என மாற்றிக் கொண்டார்.

பாபி டார்லிங்:

"Taal", "Maine Dil Tujko Diya", "Kya Kool Hai Hum" உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமானவர் பாபி டார்லிங். கடந்த 2010ஆம் ஆண்டு பாலின மாற்றம் செய்து கொண்ட பாபி டார்லிங், தனது இயற் பெயரான பங்கஜ் சர்மா என்ற பெயரை பாபி சிங் என்று மாற்றிக் கொண்டார். இவர் நடத்த Taal படத்தின் பாடல் தான் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் ஒளிபரப்பப்பட்டு பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது.

கெளரி அரோரா:

பிரபல தொலைக்காட்சி ஷோக்களை தொகுத்து வழங்கி வந்த கெளரவ் அரோரா 2016 ஆம் ஆண்டு பாலின மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு கெளரி அரோராவாக மாறினார்.

நிக்கி சாவ்லா:

இந்தியாவின் முதன் திருநங்கை மாடல் என்றால் அது இவர் தான். 2009 ஆம் ஆண்டு திருநங்கையாக மாறிய இவர் சர்வதேச அளவிலான ரேம்ப் வாக் ஷோக்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றுள்ளார்.

அஞ்சலி அமீர்:

சினிமாவில் முதல் முறையாக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த திருநங்கை என்றால் அது அஞ்சலி அமீர் தான். ஜம்சீர் என்ற பெயரை பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு பின்னர் அஞ்சலி என மாற்றிக் கொண்ட இவர் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் 1995 ஆம் ஆண்டு பிறந்தார். பேரண்பு (Peranbu 2018), தி ஸ்பாயில்ஸ் (The Spoils 2024), சுழல் (Suzal - The Vortex 2022) ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: தோனியை கவர்ந்த இளம் கிரிக்கெட் வீரர்! சென்னை அணிக்கு அதிரடி பேட்ஸ்மேன் கிடைச்சாச்சு?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.