தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்த ஆண்டு (2019) 30-வது சாலை வார பாதுகாப்பு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, துாத்துக்குடியில் சாலை பாதுகாப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இன்று (பிப்.10) சாலை பாதுகாப்பு, சாலை விதிகளை கடைபிடிக்க வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இந்த மினி மாரத்தான் போட்டியில் வ.உ.சி.கல்லூரி மாணவ -மாணவிகள், காவல் துறையினர், பொதுமக்கள், தன்னார்வலர்கள், போக்குவரத்து காவல் துறையினர் உள்பட பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.
இப்போட்டியானது வ.உ.சி.கல்லூரியில் தொடங்கி பாளையங்கோட்டை ரோடு, புது மாநகராட்சி, பழைய மாநகராட்சி வழியாக தருவை மைதானத்தில் முடிவடைந்தது.
இதைத்தொடர்ந்து மனி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.