ETV Bharat / state

தூத்துக்குடியில் ஒவ்வொரு சட்டப்பேரவைக்கும் 3 பறக்கும்படை குழுக்கள் அமைப்பு- மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பேட்டி!

author img

By

Published : Mar 1, 2021, 9:22 AM IST

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஒவ்வொரு சட்டப்பேரவைக்கும் 3 பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கூறினார்.

தூத்துக்குடி
முதியோர்களுக்கு தபால் வாக்கு சீட்டு வழங்க விரிவான-மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பேட்டி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக, திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், அரசியல் கட்சியினரின் பிரதிநிதிகளிடம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து விளக்கினார். மேலும் அவர்களிடமிருந்து கருத்துக்களும் பெறப்பட்டன.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி கரோனா முன்னெச்சரிக்கை நடைமுறைகளை பின்பற்றி தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்துவதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி 1050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி மாவட்டத்தில் 454 வாக்குச்சாவடிகள், 1050 வாக்காளர்களுக்கு மேல் இருப்பவையாக கண்டறியப்பட்டுள்ளன.

அவை இரண்டாக பிரிக்கப்பட்டு துணை வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது மாவட்டத்தில் 2097 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தேர்தலுக்காக 2719 கன்ட்ரோல் யூனிட்களும், 3 ஆயிரத்து 644 வாக்குப்பதிவு இயந்திரங்களும், போதுமான அளவு விவிபேட் இயந்திரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் சிரமமின்றி வாக்களிப்பதற்காக, சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாக்களிக்க போகும் வாக்குச்சாவடியின் பெயர் மற்றும் அவர்களுடைய விபரம் அடங்கிய குறிப்புகளை ஆன்லைன் மூலமாக பதிவேற்றம் செய்துவிட்டால் மாற்றுத்திறனாளிகளை அழைத்து வந்து வாக்களிக்கச் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அனுமதியின் பேரில், 80 வயதிற்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்கு சீட்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதியோர்களுக்கு தபால் வாக்கு சீட்டு உரிய நேரத்தில் வழங்க வேண்டும். அதில் வாக்கு செலுத்துவது எப்படி செலுத்திய தபால் சீட்டுகளை எங்கு பாதுகாப்பது எப்போது வாக்குகள் எண்ணப்பட வேண்டும் என்பது குறித்த அறிவுறுத்தல்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளன.

இது குறித்து அலுவலர்களுக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் வாக்குக்கு பணம் கொடுத்தல் மற்றும் பரிசு பொருள்கள் கொடுத்தல் தொடர்பான புகார்களை சி-விஜில் என்ற செயலி மூலம் பதிவு செய்தால், அதன் மீது உடனடி நடவடிக்கை எடுத்து தீர்வு காணுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல் தொடர்பாக, கண்காணிக்க சிறப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும், 3 பறக்கும் படை கண்காணிப்பு குழுக்கள், 3 நிலை கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 2 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்குழுவினர் சுழற்சி அடிப்படையில் பணியில் ஈடுபடுவார்கள். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பரப்புரை செய்ய தேவையான அனுமதியினை அந்தந்த சட்டப்பேரவை தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர்களை அணுகி பெற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: விழுப்புரம் சாலையோர உணவகத்தில் உணவு உண்ட அமித் ஷா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.