தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு பரிசீலனை ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் இன்று நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார்.
அப்போது, "தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19ஆம் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. இதில், மொத்தம் 62 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
மனு தாக்கல் செய்யப்பட்டவர்களின் வேட்புமனு அனைத்தும் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வேட்புமனு பரிசீலனை காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 4.40 வரையில் நடைபெற்றது. இதன் முடிவில் 51 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 10 பேரின் மனு நிராகரிக்கப்பட்டது.
வேட்புமனு வாபஸ் பெற நாளை கடைசி நாள். நாளை மாலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்றார்