ETV Bharat / state

இன்னும் 3 மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல்: துரைமுருகன் கணிப்பு - திமுக பொருளாளர் துரைமுருகன்

தூத்துக்குடி: அடுத்த மூன்று மாதத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெறலாம் என திமுக பொருளாளர் துரைமுருகன் கணித்துள்ளார்.

திமுக பொருளாளர் துரைமுருகன்
author img

By

Published : May 7, 2019, 9:11 AM IST

ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சண்முகையாவை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன், திமுக மாநிலங்களவைக் குழு தலைவர் கனிமொழி ஆகியோர் நேற்று தாளமுத்துநகர் சிலுவைபட்டியில் பரப்புரையில் ஈடுபட்டனர்.

இதில் திமுக பொருளாளர் துரைமுருகன் பேசும்போது, “இந்த இடைத்தேர்தல் முடிந்தால் அதிமுக ஆட்சி இருக்காது. இன்னும் மூன்று மாதங்களில் தமிழ்நாட்டு சட்டப்பேரவைக்கு பொதுத்தேர்தல் நடைபெறும்” என்று கணித்துள்ளார்.

ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சண்முகையாவை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன், திமுக மாநிலங்களவைக் குழு தலைவர் கனிமொழி ஆகியோர் நேற்று தாளமுத்துநகர் சிலுவைபட்டியில் பரப்புரையில் ஈடுபட்டனர்.

இதில் திமுக பொருளாளர் துரைமுருகன் பேசும்போது, “இந்த இடைத்தேர்தல் முடிந்தால் அதிமுக ஆட்சி இருக்காது. இன்னும் மூன்று மாதங்களில் தமிழ்நாட்டு சட்டப்பேரவைக்கு பொதுத்தேர்தல் நடைபெறும்” என்று கணித்துள்ளார்.

Intro:Body:



ஓட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தல் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சண்முகையா ஆதரித்து திமுக பொருளாளர் துரைமுருகன் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி ஆகியோர் பங்கேற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் தாளமுத்துநகர் சிலுவை பட்டியில் இன்று நடைபெற்றது.

இதில் திமுக பொருளாளர் துரைமுருகன் பேசும்போது,

தூத்துக்குடியில் கனிமொழிக்கு ஆதரவான தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி வைக்க முடியாத வருத்தம் எனக்கு உண்டு.

கனிமொழியை அரசியலுக்கு அழைத்து வந்ததும், தூத்துக்குடிக்கு அழைத்து வந்ததும் நான்தான்.

காய்ந்த இந்த பகுதியை வளமாக்க கூடிய ஆற்றல் கனிமொழிக்கு தான் உண்டு.

கலைஞர் கருணாநிதி திமுகவுக்கு விதை நாட்டிய இடம் தூத்துக்குடி. ஆகவே கனிமொழி இங்கு போட்டியிடுவதே சரி என தீர்மானித்தேன்.

இந்த மண் இன்று கேட்பாரற்று கிடக்கிறது. இதை மாற்ற கூடிய வளம் கனிமொழிக்கு தான் உண்டு.

இந்த மாபிள்ளையூரணி பஞ்சாயத்தில் மட்டும் 32 ஆயிரம் வாக்குகள் உள்ளது. ஆகவே இங்குள்ள மக்கள் சரியாக வாக்களித்தாலே எம்.எல்.ஏ.ஆகிவிடாலாம்.

இந்த ஆட்சியை மற்ற வேண்டும் என மிக தீவிரமாக நினைப்பவர்கள் பெண்கள் தான். ஏற்கனவே மோடி அரசை மக்கள் பாராளுமன்ற தேர்தலின் மூலம் காலி செய்துவிட்டனர். அதுபோல் இடைத்தேர்தல் மூலம் எடப்பாடி அரசை மக்கள் காலி செய்ய வேண்டும்.



நாங்கள் ஆட்சியில் இருப்பதற்கு கனவு காணலாம்.

ஆனால் தேர்தலுக்கு பின் அதிமுகவினர் ஆட்சி இருப்பதாக கனவுகாண வாய்ப்பே இருக்காது.



சுதந்திரத்துக்கு பெற்றதிலிருந்து, அதிமுகவினர் 30 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பிறகும் ஒட்டப்பிடாரம் தொகுதியில் தள்ளுவண்டியில் தண்ணீர் கொண்டு போகும் நிலை என்றால் இவர்கள் ஆட்சியில் இருப்பதற்கே அருகதை அற்றவர்கள்.



குடிநீர் மேம்பாட்டுக்காக

2000 கோடி ரூபாய் ஜெர்மன் நாட்டிடம் அதிமுகவினர் கடன் வாங்கினார்கள். இதுவரை 

திட்டம் வரவில்லை. ஆனால் 18 கோடி ரூபாய் வட்டி மட்டும் கட்டி இருக்கிறார்கள்.



கனிமொழி பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் நினைப்பதை செய்யும் நபர் எம்.எல்.ஏ.வை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். கணிமொழியும், சண்முகையாவும்

மாப்பிள்ளையூரணி என்னும் ஊரை தண்ணீர் ஊறுகிற இடமாக மாற்றுவார்கள்.



இந்த இடைத்தேர்தல் முடியட்டும் இந்த அதிமுக ஆட்சி இருக்காது.

இதை மாற்றும் வலிமை திமுக தொண்டர்கள் உள்ளது.

3 மாதம் கூட இந்த ஆட்சி நடக்காது. அடுத்த 3 மாதத்தில் சட்டமன்றத்துக்கு பொதுத்தேர்தல் கூட வரலாம்.

100 நாள் வேலை திட்டத்தை அதிமுகவினர் கெட்டு குட்டிசுவராக்கி வைத்துள்ளனர். 



365 நாளும் 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என ஸ்டாலினிடம் வலியுறுத்தி வருகிறேன்.

அதுபோல் ரூ.2000 முதியோர் உதவித்தொகை கொடுக்க நான் வலியுறுத்துவேன். தமிழகத்தில்

தளபதியின் ஆட்சி சுபிட்சமான ஆட்சியாக இருக்கும்.

அந்த ஆட்சியை அமைக்க கூடிய சக்தி ஸ்டாலினுக்கு தான் உண்டு.

அகில இந்தியாவுக்கே அரசியல் இலக்கணத்தை வகுத்து கொடுத்தவர் மு.க.ஸ்டாலின். என்றார்.



கூட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, வடக்கு மாவட்ட செயலாளர் கீதா ஜீவன், முன்னாள் அமைச்சர் நேரு ஆகியோர் இருந்தனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.