ETV Bharat / state

ஆளுயர அரிவாளால் கேக் வெட்டிய இளைஞர்கள் தலைமறைவு! - upscandin youngester

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆளுயர அரிவாளால் பிறந்த நாள் கேக் வெட்டிய இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆளுயர அரிவாளால் கேக் வெட்டிய இளைஞர்கள் தலைமறைவு

author img

By

Published : Jan 24, 2020, 2:38 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தில், கடந்த 6 மாதத்தில் 25 பேருக்கும் மேல் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள், வழிப்பறி, கொள்ளை, கொலை, பாலியல் வன்புணர்வு போன்ற சம்பவங்களால் தூத்துக்குடி மாவட்ட மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி மாநகர் அருகே பண்டாரம்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கும்பலாகச் சேர்ந்து பண்டாரம்பட்டி - மீளவிட்டானுக்கு இடைப்பட்ட சாலையில் உள்ள வெற்றிடத்தில் வைத்து பிறந்தநாள் கொண்டாடினர்.

இந்த பிறந்தநாள் விழாவில் இளைஞர் ஒருவர் கையில் ஆளுயர அரிவாளை வைத்து கேக்கினை வெட்டி, பிறந்த நாள் கொண்டாடியுள்ளனர்.

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதுபற்றி தகவல் அறிந்த சிப்காட் காவல் நிலைய காவல் துறையினர் வீடியோவில் இருக்கும் இளைஞர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

காவல் துறையினரின் விசாரணையில் வீடியோவில் பிறந்தநாள் கொண்டாடும் இளைஞர்கள் பண்டாரம்பட்டி மற்றும் மீளவிட்டான் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், சுரேஷ், பிரதீப், அமர்நாத், ரமணி, ஜான்போஸ்கோ, பிரதீப் ஆகியோர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. மற்ற இளைஞர்கள் யார் யார் என்பதைக் கண்டுபிடிக்கும் பணியில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் காவல் துறையினர் தங்களை தேடுவதாக அறிந்த அவர்கள் தலைமறைவாகி உள்ளனர். இதனையடுத்து தலைமறைவான இளைஞர்களைப் பிடிக்கும் பணியில் மாவட்ட காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

ஆளுயர அரிவாளால் கேக் வெட்டிய இளைஞர்கள் தலைமறைவு

இன்றைய கால இளைஞர் தங்களை ஹீரோவாக நினைத்துக் கொண்டு சமூக வலைதள மோகத்தினால் பல்வேறு தவறுகளை செய்து குற்றவாளியாக தன்னை உருவகப்படுத்திக் கொள்கின்றனர். இந்த மாதிரியான மனநிலையிலிருந்து இளைஞர்கள் விடுப்பட்டால் மட்டுமே குற்றங்கள் குறையும் என்பது அனைவரின் கருத்தாகும்.

இதையும் படிங்க :சுங்கச்சாவடி காவலர் அடித்துக் கொலை - வழிப்பறி கொள்ளையர்கள் அட்டூழியம்

Intro:ஆளுயர அரிவாளை வைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய தூத்துக்குடி வாலிபர்கள் - சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ காட்சிகளால் பரபரப்பு
Body:ஆளுயர அரிவாளை வைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய தூத்துக்குடி வாலிபர்கள் - சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ காட்சிகளால் பரபரப்பு

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 6 மாத்தில் குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கிட்டத்தட்ட 6 மாதங்களுக்குள் 25 பேருக்கு மேல் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள், வழிப்பறி, கொள்ளை, கொலைமிரட்டல், பாலியல் பலாத்காரம் போன்ற சம்பவங்களால் தூத்துக்குடி மாவட்ட மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி அருகே உள்ள மீளவிட்டான், பண்டாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கும்பலாக சேர்ந்து நீண்ட அரிவாளால் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாநகர் அருகே பண்டாரம்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கும்பலாக சேர்ந்து பண்டாரம்பட்டி - மீளவிட்டானுக்கு இடைப்பட்ட சாலையில் உள்ள காலி இடத்தில் வைத்து பிறந்தநாள் கொண்டாடினர். இந்த பிறந்தநாள் விழாவில் பிறந்தநாள் கொண்டாடும் வாலிபர் கையில் ஆளுயர அரிவாளை வைத்து பிறந்தநாள் கேக்கை வெட்டி பிறந்த நாள் கொண்டாடியுள்ளனர்.

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுபற்றி தகவல் அறிந்த சிப்காட் காவல் நிலைய போலீசார் வீடியோவில் இருக்கும் வாலிபர்கள் குறித்து விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் வீடியோவில் பிறந்தநாள் கொண்டாடும் வாலிபர்கள் பண்டாரம்பட்டி மற்றும் மீளவிட்டான் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் என்பது உறுதிசெய்யப்பட்டது. வீடியோவில் உள்ள வாலிபர்கள் தமிழ்செல்வன், சுரேஷ், பிரதீப், அமர்நாத், ரமணி, ஜான்போஸ்கோ, பிரதீப் ஆகியோர் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது மற்ற வாலிபர்கள் யார் யார் என்பதை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்த வாலிபர்கள், போலீஸிடம் இருந்து தப்பிப்பதற்காக தலைமறைவாகி உள்ளனர். தலைமறைவான வாலிபர்களை பிடிக்கும் பணியில் மாவட்ட போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.