தூத்துக்குடி கிருபைநகரைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் (54). இவர், வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாக தென்பாகம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், பிரான்சிஸ் வீட்டுக்கு சென்ற காவல்துறையினர் அங்கு ஆய்வு மேற்கொண்டதில், சுமார் 12 அடி உயர கஞ்சா செடி இருப்பது தெரியவந்தது.
உடனடியாக அந்த கஞ்சா செடியை பறித்த காவல்துறையினர், பிரான்சிஸை கைது செய்தனர். அதன்பின் காவல்நிலையத்தில் அவரிடம் விசாரித்த போது, கஞ்சா செடியை வளர்த்தது தான் இல்லை, தனது மகன் ராகுல்(19) என தெரிவித்தார். இதையடுத்து, வழக்குப் பதிவு செய்து தலைமறைவான ராகுலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.