ETV Bharat / state

மங்களூரு பிரச்னை குறித்து அண்ணாமலை வாய்திறக்காதது ஏன்? - துரை வைகோ கேள்வி

author img

By

Published : Nov 24, 2022, 1:17 PM IST

கோவை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு தமிழக அரசை குற்றஞ்சாட்டிய தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மங்களூரு குண்டு வெடிப்புக்கு வாய் திறக்காமல் தமிழகத்திற்கு நியாயம், கர்நாடகாவுக்கு ஒரு நியாமம் என அரசியல் செய்வதாக ம.தி.மு.க. தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

துரை வைகோ
துரை வைகோ

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அடுத்த வில்லிசேரி பகுதியில் மக்களின் பயன்பாட்டிற்காக செயல்பட உள்ள பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கிக் கிளையின் பணிகளை மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ பார்வையிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, 'தலைமை தேர்தல் அதிகாரி, மாநில ஆளுநர், தனிப்பட்ட அரசியல் கட்சி சித்தாந்தங்களுக்கு ஆதரவாக செயல்படுவது கண்டனத்திற்குரியது என நீதிமன்றமே கூறியுள்ளது.

கோவை கார் வெடிப்பு சம்பவம் பயங்கரவாதிகளின் சதி என கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, காவல்துறையின் கவனக்குறைவாலும், சரியாக செயல்படாததாலும் கார் வெடிப்பு நடந்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

அதேநேரம் கர்நாடக மாநிலம் மங்களூருவிலும் குண்டுவெடிப்பு நடந்துள்ளது, என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர் ஏற்கெனவே ஷிமோகா என்ற இடத்தில் ஒத்திகை பார்த்ததாக கூறப்படுகிறது. கோவை குண்டுவெடிப்புக்கு தமிழ்நாடு அரசை குற்றஞ்சாட்டிய, அண்ணாமலை கர்நாடகாவில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்மந்தமாக ஏன் வாய்திறக்கவில்லை.

மங்களூரு பிரச்னை குறித்து அண்ணாமலை வாய்திறக்காதது ஏன்? - துரை வைகோ கேள்வி

தமிழ்நாடு அரசுக்கு ஒரு நியாயம், கர்நாடக அரசுக்கு ஒரு நியாயம் என அண்ணாமலை அரசியல் செய்கிறார்’ எனத் தெரிவித்தார்.

குஜராத்தில் மோர்பி தொங்கு பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 140 பேர் இறந்தனர், பலர் காயமடைந்தனர், இதுகுறித்து ஒரு எப்.ஐ.ஆர். கூட பதிவு செய்யப்படவில்லை என குஜராத் உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளதாக துரை வைகோ கூறினார். அங்குள்ள பாஜக அரசின் முனிசிபல் அதிகாரிகளின் கவனக்குறைவால் விபத்து நடந்ததாகவும் துரை வைகோ தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னை மாநகராட்சி காங்., கவுன்சிலர் மரணம்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.