தூத்துக்குடி: அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தங்க தேரை பக்தர்கள் கட்டணம் செலுத்தி கோயில் கிரி பிரகாரம் சுற்றி இழுத்து சென்று வழிபடுவது வழக்கம்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்கழி மாத திருவெம்பாவை உற்சவம் இன்று (டிச. 28) தொடங்கி ஜனவரி 6 ஆம் தேதி வரை நடக்கிறது. இதனை முன்னிட்டு இன்று முதல் தங்க தேர் புறப்பாடு 10 நாட்கள் நடைபெறாது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அன்றைய தினம் ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. இதனால் இன்று முதல் மாலையில் சுவாமி
மாணிக்கவாசகர் புறப்பாடு நடக்கிறது. இதனால் வழக்கமாக மாலையில் நடக்கும் தங்க தேர் புறப்பாடு 10 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என கோயில் இணை ஆணையர் கார்த்திக் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி சட்டமன்றத் தேர்தலிலும் மாற்றம் நிகழும் - ஜே.பி. நட்டா