ETV Bharat / state

அரசுப் பள்ளி வளாகத்தில் ஆசிரியை மீது விழுந்த வாட்டர் டேங்க் கான்கிரீட்! - tamilNadu govt school teachers

திருச்செந்தூர் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் கான்கிரீட் சுவர் இடிந்து விழுந்ததில், ஆசிரியை ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

திருச்செந்தூரில் அரசுப் பள்ளி நீர்த்தேக்க தொட்டி இடிந்து விபத்து - ஆசிரியை காயம்

author img

By

Published : Jan 21, 2023, 10:31 AM IST

திருச்செந்தூர் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் கான்கிரீட் சுவர் இடிந்து விழுந்ததில், ஆசிரியை ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகில் உள்ள கீழநாலுமூலைக்கிணறில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் அரசு சார்பில் 6 ஆசிரியர்களும், பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில் 3 ஆசிரியர்களும் பணியாற்றி வருகிறார்கள்.

இந்த பள்ளி வளாகத்தில் இருக்கக்கூடிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம்தான், இப்பகுதி மக்களுக்குக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இப்பள்ளியில், 2 வகுப்பறை கட்டடங்கள் மட்டுமே உள்ளதால், பள்ளி வளாகத்தில் உள்ள மேல்நிலை குடிநீர்த்தொட்டி அருகிலும், மரத்தடியின் கீழே அமர்ந்தும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று (ஜன.20) வழக்கம்போல் பள்ளி இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது பெற்றோர் ஆசிரியர் சங்கத்தால் நியமிக்கப்பட்ட ஆசிரியை சத்யா, பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அருகிலிருந்த 50 அடி உயர மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியின் கான்கிரீட் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

அப்போது ஆசிரியை சத்யாவின் தலையில் கான்கிரீட் விழுந்துள்ளது. இதனால் தலையில் காயமடைந்த ஆசிரியை சத்யாவை, பள்ளி தலைமை ஆசிரியை இந்திராணி உள்ளிட்ட ஆசிரியர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குடிநீர்த் தொட்டி சில மாதங்களாகப் பழுதடைந்துள்ளதால், பெரும் அசம்பாவிதத்தைத் தவிர்க்கும் விதமாகக் குடிநீர்த் தொட்டியைப் பள்ளி வளாகத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என நீண்ட நாட்களாக ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் ஆகியோர் கோரிக்கை விடுத்தாக கூறப்படுகிறது.

அதேபோல் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்திலும் இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த தீர்மானம் ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை மேலத்திருச்செந்தூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில், இந்த கோரிக்கை தொடர்பாக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் பள்ளி வளாகத்தில் உள்ள நீர்த்தேக்க தொட்டி ஆபத்தான நிலையில் உள்ளதால், ஆசிரியைக்கு நேர்ந்த கதி மாணவர்களுக்கு ஏற்படும் முன்பு குடிநீர் தொட்டியை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. மூதாட்டி உட்பட இருவர் பத்திரமாக மீட்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.